பக்கம்:தொழில் வளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தொழில் வளம்



வெளிவரும் அளவு 'இரணிய கருப்பம்' நடத்திய காலமல்லவா அது. ஆகவே பொற்றாெழில் எத்துணைப் பெரும் அளவில் நடைபெற்றிருந்திருக்க வேண்டும்! அப்படியே பிற உலோகத் தொழில்களும் வளர்ந்தன.

கைத்தொழிலைப் போலவே உழவையும் வளர்த்த காலமும் அதுவே. காட்டை வளம்படுத்திய காரணத்தாலேயே சோழர் வளவர் எனப் பெயர் பெற்றனரன்றாே 'குளந்தொட்டுவளம் பெருக்கிய' பெருமை அவருடைய தன்றாே! காவிரிக்கு முதற் கரிகாலனே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கரை கட்டியவனன்றாே! பிற்காலச் சோழர், தம் காலத்தும் அக் காலத்தை ஒட்டியும் கட்டிய காவிரி அணைகளை இன்றும் நாம் வியக்கின்றோ மல்லவா? இன்று எத்தனையோ பொறியாளர்களும் பிற நாட்டுச் சிறந்த விற்பனரும் இருந்து கட்டும் பாலங்களிலும் அணைகளிலும் சிறந்தவையாகவும் உரம் பெற்றவையாகவும் அக்காலத்தில் கட்டிய அனைத்தும் விளங்குகின்றன. வன்றாே! நாட்டில் இன்று காணும் எத்தனையோ ஏரிகளும் கால்வாய்களும் அக்காலத்தில் வெட்டப் பட்டனவே யன்றாே! இவ்வாறு தொழிலையும் உழவையும் இடைக்காலத்தில் போற்றி வளர்த்தனர்.

பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின் பல நாட்டினர் தமிழ் நாட்டில் புகுந்தனர். அரசியல் காரணமாக நடைபெற்ற போராட்டங்கள் பல. இந்திய நாட்டின் வட பகுதியில். உண்டான அத்தனை மாறுதல்களும் இங்கும் உண்டகத் தொடங்கி விட்டன. அடிக்கடி அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்தன. எனினும் அத்தினை மாறுபாடுகளுக்கிடையிலும் தமிழ் நாட்டில் பல்வேறு தொழில்கள் வளர்ந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/65&oldid=1399619" இலிருந்து மீள்விக்கப்பட்டது