பக்கம்:தொழில் வளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்பத்தித் திறனும் வாழ்க்கைத்தரமும்

95


கலந்தாராய்வதாலும் விளையக்கூடிய சிறிது மாறுபடும் மிகைப்பாட்டினால் ஏற்படும் கவலையும் வேலையின்மையும், திண்ணமாக ஏற்படாமல் தவிர்க்கக் கூடும்.

மேற்கண்ட உற்பத்தித்திறனை உயர்த்தும் முயற்சிகளுள் பலவற்றை நம் தமிழ்நாட்டில் மட்டும் இன்றிப் பாரதநாடு முழுதுமே அரசாங்கத்தைச் சார்ந்தோ சாராமலோ பல அமைப்புக்களும் நிலையங்களும் அமைக்கப்பட்டு, பலவகையான திட்டங்கள் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்படுத்தப்பெற்று வருகின்றன. அதுமட்டுமன்றி இத்திட்டங்களில் மேலாட்சியினரும், தொழிலாளரும் மற்றும் இருவருக்கும் இடையே உள்ள அதிகாரிகளும் மிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

1952 லும் 1954 லும் ‘ஐ. எல். ஒ.’ குழுக்கள் இந்தியாவிற்கு வந்தன. இவை. அகமதாபாத், பம்பாய் நெசவாலைகளிலும், கல்கத்தாவின் சில பொறியியல் நிலையங்களிலும் வேலை செய்து, அவைகளிடம் இந்தப் பல வகைப்பட்ட உற்பத்தித்திறனை உயர்த்தும் முறைகளை இடமறிந்து கையாண்டதன் பலனாக, அங்கங்கே இருந்த வசதிகளையும், ஆட்களையும் கொண்டே உற்பத்தியைப் பெருக்க முடியும் என்பதை மேலாட்சி யினருக்கும், வணிகச் சங்கத் தலைவர்களுக்கும் (Trade Union Leaders) அவை எடுத்துக் காட்டின. அவைகள் 12-5% முதல் 116% வரை. விளைவுப் பெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

இக் குழுக்களின் பரிந்துரைகளாலும் அவைகள் தந்த பயன்களாலும் இந்திய சர்க்காரின் தொழி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/98&oldid=1381587" இலிருந்து மீள்விக்கப்பட்டது