பக்கம்:தொழில் வளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தொழில் வளம்


போக்குக்கான வாய்ப்புகளும் தேவைப்படுகின்றன. இவற்றின் விளைவாலும் வேலைதரும் வாய்ப்பு அதிகமாகின்றது.

உற்பத்தித்திறன் உயரும் முறையில், இயந்திரத் தொகுதிகளின் பகுதிகளிலோ அல்லது சிறு இடங்களிலோ, ஒரு வகையான நிலையற்ற மிகைபாடு (Temporary redundancy) ஏற்படுவதுண்டு. அத்தகைய மாறுபடும் மிகைப் பாட்டினால், வேலையின்மை ஏற்படுவதைத் தடுக்கும் சக்தி தொழில் துறையினரிடமும் அரசாங்கத்திடமும் உள்ளது. இதற்கான நேரடியான நடவடிக்கைகளை அவர்களால் எடுக்க முடியும். இவற்றுள் அடங்குவன :- முன்கூட்டித் திட்டமிடல், வேலை இட மாற்றங்களை முன்னறிந்து செல்லுதல், எதிர்பார்க்கும் இடமாற்றங்களைப் பற்றிய முன் அறிவிப்புக்கள், மிகைப்பாட்டினைக் குறைப்பதற்காகப் புதிதாக ஆட்களைச் சேர்ப்பதை நிறுத்தி வைத்தல் அல்லது குறைத்தல் முதலியவைகளாம். மாற்றப்பட்ட தொழிலாளரைப் புதிய வேலைகளுக்குப் பொருந்தச் செய்யும் தொழிலுதவியுடன் மறுபயிற்சி தருதல், ஓய்வுப் பணம், வீட்டு வசதிகள் தந்து எவ்விடத்திற்கும் பெயர்ந்து வாழும், நிலையை வளர்த்தல், வேலையின்மையிலிருந்து பாதுகாப்பு முதலியவைகளும் அவற்றுள் அடங்கும். வேலை உறுதி (Security) என்பது வேலைகளின் தன்மை மாறாத நிலையைக் குறிப்பதாகாது. தொழில் நுணுக்கக் கலை வளர்ச்சி, மாறுபாடு முதலியவைகளுடன், வேலைகளின் தன்மையும் உறுதியாக மாறியாக வேண்டும். மாறுதல் தேவைப்படும், இடங்களில் தொழிலாளரைச் சேர்க்க வேண்டியுள்ளது. வேலை தருவோர், அரசாங்கம் முதலியோரின் கூட்டு முயற்சிகளாலும் தொழிலாளருடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/97&oldid=1381573" இலிருந்து மீள்விக்கப்பட்டது