பக்கம்:தொழில் வளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்பத்தித் திறனும் வாழ்க்கைத்தரமும்

93


வர்களிடையே சமமாகப் பங்கிடப் பெறுகின்றனவே தவிர, முதலுக்கே சென்று சேரவில்லை என்பதை நாம் மெய்ப்பிக்கவேண்டும்.

உற்பத்தித்திறன் முயற்சியால், மிகைபாடு, (Redundancy), இடம் மாற்றம், வேலையின்மை என்பன விளையும் என்ற ஓர் அச்சமும் இருக்கிறது. உண்மையில், இது ஏற்படக்கூடியதே ஆகும். உற்பத்தித்திறன், தொழில் நுணுக்கங்கள், செய்முறைகள் என்பவற்றின் சேர்ப்பாலும், உற்பத்தி அடக்கச் செலவைக் குறைக்கும் முயற்சியாலும், இயந்திரத் தொகுதிகளிலும் அல்லது அவற்றின் தனிப்பகுதிகளிலும் தேவைக்கு, மிகுதி என்று சிலர் கருதப்படும் நிலை வரலாம் என்பதையும் எதிர்பார்க்கக்கூடும். இதுவே அச்சத்திற்கு அடிப்படை எனலாம். என்றாலும், பிறநாடுகளின் அனுபவத்தைப் பார்த்தால் இப்படி அஞ்சத்தேவை இல்லை என உறுதியுடன் கூறலாம். மாறாக, உயர்ந்த உற்பத்தித்திறன், வேலைதரும் மிக உயர்ந்த நிலைகளுடன் இணைந்து செல்வதையே அந்நாடுகளின் அனுபவம் காட்டுகிறது.

முன் கண்டவாறு உற்பத்தித்திறனை உயர்த்துவதாலும், உற்பத்தி அடக்கச் செலவையும் விற்பனை விலையினையும் குறைப்பதாலும் விற்பனை பெருகி, விரிவான தேவை உண்டாகிறது. பெருமளவில் திட்டமிடுதல், வேலை அளிக்கும் வாய்ப்பு முடிவில் விரிவடைதல் என்பன அவற்றின் விளைவுகளாகும். முதலீட்டுக்கு மிகுந்த பலன் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாவதால் தொழில் துறை விரிவடைந்து வேலைதரும் வாய்ப்பு பெருகுகிறது. மக்களின் கைகளுக்கு வாங்கும் சக்தி மிகுவதால், மேலும் பல சேவைகளும், கல்வி, பொழு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/96&oldid=1381566" இலிருந்து மீள்விக்கப்பட்டது