பக்கம்:தொழில் வளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தொழில் வளம்


ரைக்கொண்டு நல்ல முறையில் உற்பத்தித்திறனை உயர்த்த முடியும். உண்மையான-அடிப்படையான-உற்பத்தித்திறன், கொள்கை எந்த வசதியும் அல்லது வரவும் எவ்வகையிலும் வீணாவதைத் தடுக்கிறது. மேலும் வேலை நிலைமைகள் உயர்தல், களைப்பும் கடின உழைப்பும் தவிர்த்தல், வேலையில் அதிக மனநிறைவை நிலவச் செய்தல் போன்ற நோக்கங்களையும். இது கொண்டுள்ளது. அதே சமயம் எந்த ஒரு வேலையையும் அப்போது செய்யும் செய்முறையைக் காட்டிலும் சிறந்த வகையிலும், எளிமையாகவும், சீக்கிரமாகவும் செய்யும் முறை உண்டு என்பதை மறத்தல் கூடாது. அவ்வழியைக் காண முயல்வதே உற்பத்தித்திறன் முயற்சியின் கடமையாகும்.

பல வகையில் பலன்களை நல்கும் இவ்வுற்பத்தித்திறனைப் பற்றிச் சில தவறான கருத்துக்கள் சில சமயம் எதிர்பாராமல் வந்து சேருகின்றன. இம்மாதிரியான தவறான கருத்துக்களை அகற்றாவிடில் உற்பத்தித் திறனைப்பற்றி எண்ணக்கூட இடமில்லை. இதை முதலாளிகள் அதிக லாபம் குவிக்கவே பயன்படுத்தும் ஒரு கருவி எனத் தவறாகக் கருதுகிறார்கள். உற்பத்தித் திறன் முயற்சியில், நல்ல முறையில் உண்டான திட்டம், இதை ஏற்படாமல் தடுக்கும் எனலாம். முதலும், உழைப்பும், உற்பத்தித்திறன் உயர்வால் விளையும் பயன்களில் சம பங்கு பெறுவதே அதன் குறிக்கோளாகும். உண்மையில் நுகர்வோரும் அந்தப் பயனில் பங்குபெற வேண்டும். உற்பத்தி அடக்கச் செலவுக் குறைவால் பொருள்களின் விற்பனைவிலை குறைவதன் பலனாக, அவர்கள் நன்மை பெறுகிறார்கள் ஆகவே, உற்பத்தித்திறன் உயர்வால் வளரும் பயன்கள், வேலை தருவோர், தொழிலாளர், நுகர்வோர் என்ப-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/95&oldid=1381561" இலிருந்து மீள்விக்கப்பட்டது