பக்கம்:தொழில் வளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்பத்தித் திறனும் வாழ்க்கைத்தரமும்

91


குறைத்து உற்பத்தித்திறனை அதிகமாக்கி இருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு வளனை மட்டும் கொண்டு உற்பத்தித்திறனை அதிகரிக்கும்போது, அந்த உற்பத்தித்திறன் விகிதத்தை எந்தவகை வளத்தைக்கொண்டு அதிகரித்தோமோ அதற்கென்வே சம்பந்தப்படுத்தி (With respect to) தெரிவிப்பது இயல்பு. பொதுவாக மேலை நாடுகளில் ஊழியர்கள் அதிகக் கூலி வாங்குவதாலும், ஆட்கள் கிடைப்பது மிக அரிதாகின்றதாலும் அவர்கள் பொதுவாக உற்பத்தித்திறனை எப்பொழுதும் பணியாற்றுவதுடன் சம்பந்தப்படுத்தியே கருதுவர். (Productivity with respect to Labour). ஆனால் நம் நாட்டில் ஆட்களின் சக்தி அதிகமாகவும் அதனால் அதன் விலை குறைவாயும் இருப்பதால் நம் நாட்டில் உற்பத்தித் திறனை இயந்திர வசதிகளுடன் சம்பந்தப்படுத்தி ஒப்பிட்டுப் பார்ப்பது முறையாகும் எனக் கருதப்படுகின்றோம். (Productivity with respect to Machinery). இம்மாதிரி உற்பத்தித்திறனை ஏதாவதொரு வளத்துடன் சம்பந்தப்படுத்துவது அந்தந்தச் சூழ்நிலையைப் பொறுத்துள்ளது. எப்படிச் சம்பந்தப்படுத்தப்பட்டாலும் பலன் அடக்கவிலையையும், கால அளவையும் குறைப்பதிலேயே முடியும்.

உற்பத்தித்திறனின் நோக்கம், அதிகமான உற்பத்தியைக் குறிக்கிறதே தவிர மிகவும் கடினமான வேலையைக் குறிக்கவில்லை. வேலைச் சுமையை (Work load) அதிகப்படுத்துவதாலோ அல்லது துரிதப்படுத்துவதாலோ உற்பத்தித்திறனை யாரும் எதிர்பார்க்கவில்லை; எதிர்பார்க்கவும் கூடாது. எதிர்பார்த்தாலும் அதில் நிலைத்த வெற்றி காணவும். முடியாது என்பது உறுதி, மேலாட்சி (Management) யானது விஞ்ஞான அடிப்படையில் இயங்குமாயின் தகுந்த உரிய மேலாள-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/94&oldid=1381559" இலிருந்து மீள்விக்கப்பட்டது