பக்கம்:தொழில் வளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தொழில் வளம்


செய்தால் தான் உற்பத்தித்திறனும், அதன் விளைவாக உற்பத்தியும் உயரலாம் என வரையறுத்துக் கூற முடியாது; அந்தந்தச் சூழ்நிலைக்குக் காரணமாக அமையும் காரணிகளையும், மக்களின் ஒற்றுமை உறவுத் தன்மையையும் இன்ன பிறவற்றையும் பொறுத்ததென அறிதல் வேண்டும். முன்பே கண்டவாறு ஒரு முடிவுப்பொருள் அல்லது விளைவை அடையச் செய்யும் முறைகளில் பலதிறப்பட்ட வளங்களை அல்லது வசதிகளைப் பயன்படுத்துகின்றோம். உற்பத்தித்திறன் என்பதும் விளைவின் அளவிற்கும் அதற்காகச் செலவிடப்பட்ட வளங்களின் அளவிற்கும் இடையே உள்ள விகிதம் என அறிந்தோம். ஒரு விகிதம் கண்டு பிடிக்க வேண்டுமானால் பின்னத்தில் மேலுள்ளதும் கீழ் உள்ளதும் இரண்டும் ஒரே அளவையில் தான் (Unit) இருக்க வேண்டும். ஆனால் வளங்கள் பலதிறப்பட்டவைகளாக இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை மற்றவற்றின் அளவையினின்றும் வேறுபட்டிருக்கிறது. பொதுவாக இதைக் கணக்கிடும்போது இரண்டையும் விலைமதிப்பிட்டுப் பின்பு விகிதம் கண்டுபிடிப்பார்கள். ஆனால் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு வளம் அல்லது வசதியை மட்டும் சீர்திருத்திக் கவனித்துத் திறமையாகப் பயன்படுத்தி மற்ற வசதிகளின் அளவுகளை அப்படியே வைத்திருக்க வேண்டி இருக்கும். உதாரணமாக வேண்டிய மூலப் பொருள்கள், இயந்திரங்கள், இயங்கும் சக்தி, இடம் முதலியவற்றை அப்படியேவைத்துத் திறமையான வெறுப்பும் கட்டமுமின்றி நிறைய வேலை செய்யும் ஆட்களை வைத்து ஆட்களின் சக்தித் தேவையை மட்டும் குறைத்திருக்கலாம். அல்லது ஆட்கள், இயந்திரங்கள், இயங்கும் சக்தி, இடம் முதலியவற்றை அதே அளவு வைத்து மூலப் பொருள்களின் தரத்தை மட்டும் உயர்த்தி அதன் அளவைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/93&oldid=1381553" இலிருந்து மீள்விக்கப்பட்டது