பக்கம்:தொழில் வளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்பத்தித் திறனும் வாழ்க்கைத்தரமும்

89


நிலை அவற்றின் தரம், வளங்கள் அல்லது வசதிகள், எளிதில் இயங்குதல், முதலும் கடனும் எளிதில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு, வரி, கல்விக்கும் பயற்சிக்கும் வாய்ப்புக்கள், தொழில் ஆராய்ச்சி, இயற்கை வளங்கள், தட்ப வெப்ப நிலைகள், நடப்பிலுள்ள ஆற்றல் மிகுந்த வளங்கள் முதலானவைகள் ஆகும். மற்றொரு வகை காரணியாக இருக்கும் உள் காரணிகள் இயந்திரத் தொகுதிகளில் உற்பத்திப் பெருகுவதற்குப் பயன்படக் கூடிய அடிப்படைக் கருவிகளைப் பெற்றுள்ளன. இவற்றில் சேர்வன; விஞ்ஞான முறையில் அமைந்த மேலாட்சித் தொழில் நுணுக்கங்கள், (Scientific Management) மனிதர் தம் ஒற்றுமை (Human relations), உற்பத்திக்கட்டுப்பாடு (Production control); உற்பத்தித்திட்டமிடுதல் (Production planning), எந்திரத் தொகுதியின் பரப்பு, பொருள்களைக் கையாளும் முறை, வேலை ஆராய்தல் (Method study), வேலையை அளக்கும் முறை (Work Measurement), அடக்கச் செலவுக் கட்டுப்பாடு, தரக் கட்டுப்பாடு, பொருள்களின் உருவக அமைப்பு (Design), எளிமைப்பாடு, சில பகுதிகளைக் கொண்டே பல வகை அளவுப் பொருள்களைச் செய்தல் (Standardization), தனிச்சிறப்பெய்தல் (Spceilisation), உள்ள எல்லா வளங்களையும் முழு அளவிற்கும் பயன்படுத்தும் வகை (Utilisation), இன்னும் இவை போன்றன பிறவும் எனலாம்.

மேற்கண்ட காரணிகளில் இருந்து நாம் உற்பத்தித்திறனை உயர்த்துவது என்பது எளிதானதல்ல என அறிகிறோம். அதே சமயம் எப்படியாவது உற்பத்தித் திறனை உயர்த்தினால் நாட்டில் உள்ள பலரும் பலவிதங்களில் பயனடைவர் எனவும் அறிகிறோம். இந்தப் பொருள் உற்பத்தி செய்ய இந்தச் சூழ்நிலையில் இன்னது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/92&oldid=1381497" இலிருந்து மீள்விக்கப்பட்டது