பக்கம்:தொழில் வளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தொழில் வளம்


இவ்வாறு பலப்பல பயன்களை அடைய வழி செய்யும் உற்பத்தித்திறனை நாம் ஏன் கடைப்பிடிக்கக் கூடாது? இதற்கான வழிகள் என்ன என்று நாம் இதுவரை யோசிக்காமல் இருந்திருப்பினும், இனியாவது கடைப்பிடிக்க முயல வேண்டும். அப்படி இல்லையெனில் பிறநாட்டவர் நம்மைவிட வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டும் நாம் பின்னோக்கியும் செல்ல இடம் ஏற்பட்டுவிடும். அரசாங்கத்தினர் பலப்பல ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டாலும் நம் நாட்டின் பொருளாதார நிலையும் மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர வேண்டுமானால், முக்கியமாக நம் நாட்டுத் தொழிற் கூடங்களில்–பெருந்தொழில் சிறுதொழில் எதுவாயினும்– உடனடியாக உற்பத்தித்திறன் உயர்ந்தே ஆக வேண்டும். இது தானாக உயர வழி இல்லை. தொழிற் கூடங்களின் மேலாட்சியினரும் (Management) அக்கூடங்களில் உழைக்கும் மக்களும் தங்களுள் ஒருவரை யொருவர் அறிந்து, நாட்டுக்கும் சமூகத்திற்கும் அவர்கள் எப்படிக் கட்டுப்பட்டிருக்கின்றனர், அவர்களின் பொறுப்பு என்ன என உணர்ந்து முயற்சி செய்து தொழிற்பட வேண்டும்.

உற்பத்தித்திறனை உயர்த்தக் காரணமாக அமையும் காரணிகள் (factors) இரண்டு வகைப்படும். இவைகள் ‘வெளி’க் காரணிகள், ‘உட்’காரணிகள் என்பனவாகும். முதல் வகையானது அரசாங்கத்தினரின் திட்டங்களையும் உதவியையும், தேசியச் சூழ்நிலையையும், அத்தொழிற் கூடங்களில் பூகோள அமைப்பில் பெற்றுள்ள இருப்பிடத்தையும் பொறுத்திருக்கின்றன. இவற்றில் அடங்குவன :– விற்பனையின் அளவு, பொருளாதாரம், செயல்படும் நிலை, விற்பனைப் போட்டியின் அளவு, மூலப்பொருள்கள் எளிதில் கிடைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/91&oldid=1381489" இலிருந்து மீள்விக்கப்பட்டது