பக்கம்:தொழில் வளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்பத்தித் திறனும் வாழ்க்கைத்தரமும்

87


வதால் மக்களின் வருவாய் அதிகமாகிறது. அதே சமயம் அவர்களின் வசதிகளை வாங்கும் சக்தி (Purchasing Capacity) அதிகமாகிறது. இதனூடே மக்களின் வசதிகள் பெருகும் வேகம் அல்லது வீதம் (rate) அதிகமாகிறது. ஆகையால் மக்களின் வாழ்க்கைத் தரமும் கூடவே அதிகரித்து உயருகிறது. இது மட்டுமன்றி உள்நாட்டிலும், வேறு பிற வெளிநாடுகளிலும் நம் பொருள்களின் தரம், உயர்ந்திருப்பதாலும், விலை குறைந்திருப்பதாலும் வியாபாரம் பெருகுகிறது. இதன்மூலம் நாட்டுக்கு அதிக வருமானம் உயர; வருமானத்தினால் நாட்டின் பொருளாதாரமும் உயர்கிறது.

உற்பத்தித்திறன் உயர்வதால் மக்களின் வாழ்க்கைத் தரமும், நாட்டின் பொருளாதாரமும் எப்படி உயர்கின்றன என்று மேலே கண்டோம். மேலை நாடுகளில் உபயோகிக்கப்படும் எவ்வழியாயினும் நாம் உடன் அதை மேலானது என்று கருதுகிறோம். மேல் நாட்டுப் பொருள்கள் என்றால் உடன் எவ்விலையாயினும் எவ்வழியினும் பெறத் தயாராக இருக்கிறோம். அவர்களின் பொருள்கள் இங்கே நம்மிடம் விற்கப்படுவதால் அவர்களுக்குப் பணம் நிறையப் போகிறது. அவ்வாறு பணம் போகும் இடத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியமும் அதிகமாகிறது. இவ்வாறு ஊதியம் பெருகும் சமூகத்தில் அவ்வூதியத்தைப் பயனுள்ளபடி பயன்படுத்த மக்கள் முற்படுகின்றனர். இதன் காரணமாகவே குறைந்த வேலை நேரம், வேலை நிலைமைகளில் முன்னேற்றம், பொருள்களையும் இன்பத்தையும் அனுப்விப்பதற்கு நல்ல ஓய்வு, வேலையைப் பொறுத்த உயர்ந்த மனநிறைவு என்பவைகள் தாமாக ஏற்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/90&oldid=1381483" இலிருந்து மீள்விக்கப்பட்டது