பக்கம்:தொழில் வளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தொழில் வளம்


ஒரு சமூகம் என்று எடுத்துக்கொண்டால் அதனுடைய மக்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்குத் தங்களின் உழைப்பைக் கொடுத்து ஊதியம் பெறுகிறார்கள். அவ்வூதியத்தைக்கொண்டே தங்களுக்கு வேண்டிய மற்றப் பொருள்களை வாங்கிக் கொள்கிறார்கள். இதே மக்கள் தாம் பல தொழிற்கூடங்களில் அப்பொருள்களைச் செய்ய வேண்டியவர்களாக ஆகிறார்கள். இம்மக்கள் ஒரு தொழிற் கூடத்தில் வேலை செய்யும்பொழுது அங்குள்ள செய்மானத்தை அதாவது வளங்கள் அல்லது வசதிகளைச் சிக்கனமாகவும், திறமையாகவும் பயன்படுத்தி உற்பத்தித்திறனையும், அதன்மூலம் உற்பத்தியையும் அதிகமாக்குகிறார்கள். உற்பத்தித்திறன் அதிகமாகும் காரணத்தால் பொருள்களின் அடக்கவிலை குறைகிறது. அதே சமயம் பொருள்களின் தரம் உயர்ந்து அவகைளைச் செய்யும் நேரம் அல்லது கனஅளவு குறைகிறது. இதே மக்கள் தொழிற் கூடத்தைவிட்டு வெளியே செல்லும்போது சாமான்களை வாங்கும் வாடிக்கைக்காரர்களாகின்றார்கள் (Customers). மிகக் குறைந்த நேரத்தில் மலிவாகப் பொருள்களை உற்பத்தி செய்வதனால் பலருக்கும் அப்பொருள்களை அடைய வழி வகுக்கப்படுகிறது. அப்படி நிறையப் பொருள்கள் விற்பதால் தொழிற் கூடத்திற்குப் பெரும் அளவில் இலாபம் வர ஏதுவாகிறது. அவ்வாறு அதிகலாபம் வரும் தொழிற்கூடத்தில் பணியாற்றும் மக்கள் அதிக ஊதியத்தை அடைகின்றனர். அதிக ஊதியம் பெறும் மக்கள் மேலும் மேலும் மற்றத் தொழிற்கூடங்களில் உற்பத்தித்திறன் உயர்த்தும் வழியில் உற்பத்தியாகும் பல பொருள்களை வாங்கி வாழ்க்கை வசதிகளைச் செய்துகொள்ள இடம் உண்டு. ஆகையால் இந்த உற்பத்தித்திறன் உயரு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/89&oldid=1381476" இலிருந்து மீள்விக்கப்பட்டது