உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பருத்தி, ஈரப்பதமுள்ள காற்று போன்றவற்றுடன் தொடர்புடைய சொற்களை அறிமுகப்படுத்திய பிறகுதான் அந்தக் குழந்தைக்கு மதுரைப் பக்கச் சொற்கள் பற்றிய அறிமுகம் வேண்டும். வழக்காறுகளான, கதைகள், பாட்டுக்கள், விடுகதைகள், பழமொழிகள் மூலம் வேறுபட்ட அனுபவங்களையும் அவற்றுக்குரிய சொற்களையும் அறிமுகப்படுத்தலாமா? மொத்தத்தில் வட்டார வேறுபாடுகளை உள்ளடக்கிய ஒரு மொழிக்கல்வி அவசியம். ஏனென்றால் அந்த வட்டாரம் இல்லாமல் அந்த மனிதன் இல்லை. வட்டார வேறுபாடுகளை முற்றாக நிராகரிக்கும் பொதுமொழியைக் கற்கும் நிலைமை பள்ளிக் குழந்தைகளுக்கு வரக்கூடாது. வட்டார வழக்குகளில் சாதி அதிகாரமும் சமயக்கூறுகளும் பால்நிலை வேறுபாடுகளும் மிக இயல்பாக இடம் பெற்றிருக்கின்றனவே? நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிகாரம் சார்ந்து அல்லது சுரண்டல் சார்ந்து வருகின்ற சொற்களைக் கட்டாயம் அந்நியப்படுத்த வேண்டும். ஆனால் சாதி வழக்குகளில் இவை மட்டுமே இல்லை. தொழில்சார்ந்த அறிவும் அவற்றில் பொதிந்துள்ளது. குழந்தைகள் இந்த அறிவை மிக இயல்பாகவே தமதாக்கிக் கொள்கின்றனர். ஒரு தச்சர் வீட்டுக் குழந்தை படிக்க வரும்போது அந்தக் குழந்தைக்குத் தச்சுவேலை செய்கிற கருவிகளுடைய வகைப்பாடும் அவற்றினுடைய பெயர்களும் தெரிந்திருக்கும். இது சுத்தியல், இது ஆப்பு, இது ஆப்புக்கு வைக்கிற உளி, ஆப்புளி,இது கொட்டாப்புளி, இது இழைப்பு என்று இந்த மாதிரியான கருவிகளின் அறிமுகமும் அவற்றினுடைய பெயர்களின் அறிமுகமும் அவற்றினுடைய பயன்பாடும் அக்குழந்தைக்குத் தெரிந்திருக்கும். உழவர் வீட்டுக் குழந்தைக்கு உழவு சார்ந்த சொற்களும் அந்தக் கருவிகளின் பெயர்களும் தெரிந்திருக்கும். இவ்வாறாக உழைப்பு தொடர்பான, குழந்தைகள் ஏற்கெனவே பெற்றுள்ள சொல்தொகையை நாம் கைவிட வேண்டியதில்லை. பால் வேறுபாடுகளைப் பொறுத்தவரை இவ்வேறுபாடுகள் காட்டாத சொற்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது அவசியம். பெண்கள் கல்லூரி முதல்வரை ‘முதல்வர்' என்றுதான் சொல் கிறோம். தொடக்கத்திலேயே அந்தச் சொல்லைப் பழக்கத்திற்குக் கொண்டுவந்துவிட்டோம். ஏனென்றால் முதல்வி என்று சொன்னால், அது அவ்வளவு நன்றாக இல்லை. பேராசிரியை என்று சொல்வதில் எனக்கே உடன்பாடில்லை. பேராசிரியர் என்று பால்காட்டாச் சொல்லாகத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். I 1522 தொ. பரமசிவன்