உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழிக்கல்வியில் வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக, குறிப்பிட்ட சமுதாயங்களுக்குரிய மொழியைக் 'கொச்சை' என்று சொல்லிப் புறந்தள்ளிவிடுகிறோம். அச்சமுதாயங்களைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் பேசத்தயங்குவதையும் ஆசிரியர்கள் அவர்கள் பேசும் மொழியைப் பழிப்பதையும் கல்வி ஆய்வாளர்களில் சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். நம்முடைய பழைய இலக்கணங்களில் இவ்வாறு சொல்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. தொல்காப்பியரை எடுத்துக்கொள்வோம். மொழிக்கு அதிகாரிகள் மக்கள் என்பதிலே ரொம்ப அழுத்தமான கருத்துடையவர் அவர். எடுத்துக்காட்டாக, பெயர்ச்சொற்களை வகைப்படுத்துகின்ற போது, ஓர் இடத்திலே சொல்கின்றார் 'கூடிவரும் வழக்கின் ஆடியற் பெயர்' என்கிறார். இது என்னவென்று கேட்டால், பிள்ளைகள் விளையாடுகின்றபோது அணிகளுக்குப் பெயர் இட்டுக்கொள்வார்கள் அல்லவா? இதையும் கணக்கிலே சேர்க்க வேண்டும் என்பது தொல்காப்பியர் கூற்று. நேரு அணி, காந்தி அணி, வள்ளுவர் அணி, எனப் பள்ளிக்கூடத்திலே பிரித்துக்காட்டுவார்கள் அது போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். தொல்காப்பியர் தெளிவாக, முதன்மை தர வேண்டியது வழக்கு மொழிக்குத்தான், பேச்சு மொழிக்குத்தான் என்கிறார். எனவே மக்கள் மொழி என்பது அம்மக்களது சமுதாய நிலை என்னவாக இருந்தாலும் முதலானது. மேலும் பேச்சு மொழியிலிருந்துதான் எழுது மரபு கிடைத்தது. பேச்சு மொழியிலே ஓர் இலக்கணம் உண்டு. அந்த இலக்கணம்தான் எழுத்து மொழிக்குக் கொண்டு வரப்பட்டதே தவிர, எழுத்துமொழியின் இலக்கணம் பேச்சு மொழிக்குக் கொண்டு போகப்படவில்லை. எனவே பேசுகிற மனிதனே மொழிக்கு அதிகாரி. ஆசிரியர்களோ இலக்கண ஆசிரியர்களோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், இலக்கண மரபு என்பது உங்களுடைய உடம்பிற்குள்ளாக, உங்களுடைய மூளைக்குள்ளாக இருக்கிறது. அதுதான் கொஞ்சம் திருந்திய வடிவத்திலே எழுத்தில் இருக்கிறது. தொடர்ந்து மாற்றங்களுக்குள்ளாகும் பேச்சு மொழிதான் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு, பண்புக்கு ஆதாரமென்றால் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழ்மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எவ்வாறு புரிந்துகொள்வது? ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் என்பதே கிடையாது. ஒரு சொல்லுக்குக் காலம்தோறும் அனுபவம் சார்ந்து பொருள்கள் விரிவடைந்து கொண்டே வரும். இது ஒருபுறம்; மறுபுறமாகச் நேர்காணல்கள் A 153 2