உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்றும் பிறந்த தேசத்திலே பெயர் இருக்க முடியாது. மிளகுபோல உறைப்புடையது, காயாக இருக்கிறது என்பதினாலே மிளகாய் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இப்படித்தான் சொல்லும் பொருளும் அனுபவங்களும் மாறிக்கொண்டே வருகின்றன. இந்த மாற்றங்களுள் மொழிக்கலப்பும் அடங்கும் அல்லவா? மொழிக்கலப்புகளெல்லாம் ஒரே மாதிரியானவையல்ல. அரசதிகாரம் சார்ந்து, எழுத்திலக்கியம் சார்ந்து வந்த மொழிக்கலப்புகள் பெரும்பாலும் வடமொழி வழியாக வந்தவை. கிறிஸ்தவம் சார்ந்தும் இஸ்லாம் சார்ந்தும் வந்த மொழிக்கலப்புகள் மக்கள் தரப்பிலிருந்து வந்தவை. 'குஷ்கா' என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். புலால் சேர்ந்த நெய்ச்சோற்றுக்குக் குஷ்கா என்று பெயர். இது மக்கள் வழியாகப் பரவிய சொல். இன்றைக்கு குஷ்கா என்ற சொல் எல்லாருக்கும் தெரியும். பாளையங்கோட்டையில் 'ஒசிசி' என்றால் எல்லாருக்கும் தெரியும். இதற்கு அப்பம் என்று பொருள்; இது கிறிஸ்தவம் சார்ந்து வழங்குகின்றது. அதுபோல் சொல்லுக்குக் கலாச்சார ரீதியான சில முத்திரைகளும் உண்டு. ஆண்டவர் என்பதும் கர்த்தர் என்பதும் பொதுச் சொல்தான். ஆனாலும் இச்சொற்கள் கிறிஸ்தவப் பின்னணியோடு மட்டுமே அறியப்படுகின்றன; அது வாழ்தலின் அனுபவம். ஆண்டவர் என்ற சொல்லை இஸ்லாம் பாவிக்கும். உதாரணத்துக்கு நாகூர் ஆண்டவர். கர்த்தர் என்றோ இறைவன் என்றோ இஸ்லாமியர்கள் வழக்கமாகச் சொல்லமாட்டார்கள். இஸ்லாம் அதிகமாகப் பயன்படுத்துகிற மரியாதைக்குரிய சொல் 'அப்பா'. 'அவர்கள்' என்பதற்குப் பதிலாக 'அப்பா' என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்; பீர் அப்பா; தக்கலை பீர் அப்பா.உமறுப் புலவரையே 'உமர் அப்பா' என்று எழுதுவார்கள். இது இந்த மொழிக்குள்ளிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட சொல். அவர்களின் திருமணப் பத்திரிக்கையில் மணாளன், மணாளினி என்று இருக்கும். இதெல்லாம் இஸ்லாம், கிறிஸ்தவம் சார்ந்து வருகின்ற சொற்கள். இவை அவர்களே தங்கள் புதுசமயத்திற்காக ஆக்கிக் கொண்டவை. கோவில் என்பதற்கு மாற்றாக, தேவாலயம் என்ற சொல்லைக் கைக்கொண்டனர். அதேபோல் வழிபடும் இடத்தை இஸ்லாமியர்கள் 'மஸ்ஜித்' என்று சொல்லவில்லை. பள்ளிவாசல் என்ற சொல்லைக் கையாண்டனர். எல்லாப் பள்ளிவாசல்களிலும் குழந்தைக்கு ஐந்து கலிமாவையும் ஓதக் கற்றுக்கொடுக்கின்ற ஓர் ஆள் உட்கார்ந்து கொண்டிருப்பார். இதனால்தான் அதற்குப் 'பள்ளி' என்றே பெயர் வந்தது. கற்றுக்கொடுக்கிற இடம் பள்ளி. இது பழைய சமண நேர்காணல்கள் No 155 12