அத்தியாயம் 9 "தாவர இயலின் எந்தக் குறிப்பிட்ட துறையிலும் நான் ஈடுபட்டிருக்கவில்லை. அவ்வாறு ஈடுபட வேண்டின், பொதுவாக இயற்கை வரலாறு பற்றி அதிகமாக என்னுல் கூற முடியும்.” தோரோ : மார்ச் 1882இல் எழுதிய ஒரு கடிதத்தில். தோரோவும், ஹாதார்னும் கோடை காலத்தைப் பல இடங்களில் சுற்றித் திரிந்தும், பனிக் காலத்தைப் பணிச் சறுக்கலில் சறுக்கியும் இன்பமாகக் கழித்தனர். ஒல்ட் மான்ஸ் என்ற இடத்தில் பல முறை ஹாதார்ன் தோரோ வை உபசரித்தார். ஜான் என்பவரும் தாமும் சேர்ந்து செய்த ஒரு படகை, காங்க்கார்டு, மெர்ரிமாக் ஆறுகளில் எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதை ஹாதார்னுக்குத் தோரோ கற்பித்தார். தோரோவைப்பற்றி, ஹாதார் னின் நாட்குறிப்பு "கிராமியத் தோற்றமும், அழகற்ற வடிவ மும் உடையவராயினும் நல்ல பண்பாடுடையவர் என்று கூறுகிறது. ஹாதார்னேப்பற்றித் தோரோவின் நாட்குறிப்பு “எளிய குழந்தை மனம் படைத்தவர் என்று குறிப்பிடு கிறது. 1854 இல், வால்டன் என்ற நூல் வெளிவந்ததிலிருந்து தோரோவுக்குப் பண்பாடுடையவர்களின் நட்புப் பெருக லாயிற்று. ந்யூ பெட்போர்டைச் சேர்ந்த 'குவேக்கராகிய டேனியல் ரிக்கெட்ஸன் என்பவர், "வால்டன்- என்ற நூலின் ரசிகரானர். தோரோவைப் பலமுறை உபசரித்த துடன் காங்க்கார்டுக்கும் அவர் வந்து செல்வதுண்டு. குவேக்கராக இருந்த அவருடைய எளிமை, தோரோவைப் பெரிதும் கவர்ந்தது ; அவர்களிவரும் நெருங்கிய நண்பு ராயினர். அவர்களிடையே இடைவிடாமல் கடிதப் போக்கு வரத்து நடந்தது ; பிற்காலத் தோரோவைப் பற்றி ரிக் கெட் எலன் நன்கு அறிந்திருந்தார். ஆங்கில நாட்டைச் சேர்ந்த ஷார்ப்ஷையர் என்ற ஊரவரான தாமஸ் சகுவேக்கர்-நண்பர்கள் சங்கத்தவர் 114
பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/120
Appearance