பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோல்மான்டிலே என்பவர், வால்டன்' என்ற நூல் காரணமாக, தோரோவின் நண்பரானர். அவர் மிகுதியாகப் பிரயாணம் செய்து, ந்யூசிலாந்தைப்பற்றித் தத்துவ ஞான நோக்கில் எழுதியுள்ளார். அவர் தம்முடைய நூல் களிலும், தோரோவைப்போலவே, கீழ் நாட்டுத் தத்துவத்தையும், மேட்ைடு விஞ்ஞானத்தையும் கலந் துள்ளார். எமர்ஸ்:னச் சந்திப்பதற்காகவே அவர் காங்க் கார்டுக்கு வந்தார் எனினும், தோரோவே அவர் மனத் துக்கு மிகவும் பிடித்தவரானர். மறு ஆண்டு, இங்கிலாந்தி விருந்து, ஹிந்து சமய நூல்கள் நாற்பத்திரண்டைத் தோரோவுக்கு அனுப்பினர். "வால்டன்’ என்ற நூல் வெளி யான மறு ஆண்டே, ஃப்ரேங்க்லின் பி. ஸான்பார்ன் என்ற இளைய ஆசிரியர் காங்க்கார்டுக்கு வந்து சேர்ந்தார். அவர் எமர்ஸனைச் சந்திக்கவே வந்தாலும், தோரோவின் ரசிகராக மாறிவிட்டார். அடுத்த மூன்ருண்டுகட்குத் தோரோவின் தாயார் அவருக்கு உணவு படைத் தார். இம்முறையில், தோரோவின் குடும்பத்தில் ஒருவராக மூன்று ஆண்டுகள் வாழ்ந்த ஸான்பார்ன், அக் குடும்பத் தின் முற்போக்குக் கருத்துக்களையும், உலகியல் கடந்த இயல்பையும் நெருங்கி இருந்து கண்டு, தோரோவை நன்கு அறியும் வாய்ப்பைப் பெற்ருர். ஆதலால், பிற்காலத்தில், தோரோவின் வரலாற்றை ஒப்பற்ற முறையில் அவர் எழுத முடிந்தது. உணர்ச்சி மிக்கவரும், உலகியல் கடந்தவருமான எல்லரி சேனிங் என்பவரே தோரோவின் வரலாற்றை, முதன் முதலில் எழுதினர். அவர் மிக நெருங்கிய நண்ப ராய் இருந்துங்கூட, தோரோவின் வாழ்க்கையில் ஏற்பட்ட சுய சந்தேகங்கள், நம்பிக்கை இழப்புக்கள் ஆகியவற்றைப் பற்றி ஒன்றுங் கூறியதாகத் தெரியவில்லை. அவை தோரோ வின் நாட்குறிப்பில் மட்டுமே உள்ளன. மிகநீண்ட தூரத்தி லிருந்து குட்டையின் பக்கத்திலுள்ள குடிசைக்கு வந்தவர் சேனிங் தான். அவர் தான் ஆழ்ந்த பணியையும், கொடிய புயலேயுங் கடந்து, தோரோவைச் சந்திக்க் வந்தார். இவ்வாறு சேனிங் தம்மிடம் வந்ததைப்பற்றிக் கூறவந்த தோரோ விளையாட்டாக “ஒரு குடியானவர், ஒரு வேட் டைக்காரர், ஒரு வீரர், ஒரு பத்திரிகை நிருபர் என்பவர் களாகவோ அன்றி ஒரு தத்துவஞானியாகவோ இருப்பி L15