பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்றவர்களிடம் விட்டுவிட்டார். மெஸ்சூலிட்ஸில் அடிமைகள் என்ற நூலே எழுதிய மூன்று ஆண்டுகள் கழித் துத் தோரோவிடம் ஒருவர் வந்து சேர்ந்தார். அந்த மனித ரின் எண்ணங்கள், ஆளுமை, விதி ஆகியவற்ருல் உந்தப் பெற்ற தோரோ வேறு எந்த ஒரு மனிதருக்கும் செலவிடாத அளவுக்கு அதிக உணர்ச்சியையும், சொற்களையும் அவருக் காகச் செலவிட்டார். கன்ஸாஸ், மாகாணத்திலுள்ள ஒஸ்வத் தாமி என்ற ஊரைச் சேர்ந்த புகழ் பெற்ற ஜான் ப்ரெளன் என்பவரே இவர் ; கன்ஸ்ாஸ் மிஸ்லோரி என்ற மாகாணங்களின் இடையே நடைபெற்ற எல்லைச் சண்டை யில் ஈடுபட்டிருந்தவர். இந்தச் சண்டையில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. இரு பக்கத்தாரும் பெரிதும் நஷ்டமடைந்தனர். இதன் பிறகு, 1857 இல் அடிமை வியாபார எதிர்ப்புப் போராட்டத்திற்குக் கட்சி சேர்ப்பதற் காகவே இவர் மெஸ்சூஸிட்ஸுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்த மிதவாதிகள், ஜான் ப்ரெளன, இரத்த வெறி பிடித்த புரட்சியாளர் என்று கருதி வரவேற்க மறுத்து விட்டாலும், சான் ப்ரன், அவருடைய நண்பர்கள் ஆகிய வர்களால் வரவேற்கப் பெற்ருர். சான் ப்ரன்தான், ஜான் ப்ரெளனேக் காங்க்கார்டிற்கு அழைத்து வந்தார். இதன் நோக்கம் என்னவெனில், காங்க்கார்டில் யாரேனும் கிளர்ச் சிக்கு உதவக் கூடியவர்கள் இருப்பின் அவர்கட்கு வாய்ப்புக் கொடுக்கவே யாகும். அடிமைகளே வைத் திருக் கும் மாகாணங்களில் போராட்டம் நடத்துவதற்குக் கிளர்ச்சி செய்யும் நிறுவனங்கள் ஏற்படுத்தும் விஷயத்தில், தோரோவும் எமர்ஸ்இனப் போலவே அவ்வளவு அதிகக் கவலே எடுத்துக் கொள்ளவில்லை எனினும், ஜான் ப்ரெளனே நேரே கண்டு, அவருடைய ஊக்கத்தையும், ஒருமுகப்பட்ட மனப்பான்மையையும் கண்ட பிறகு, அவற்ருல் பெரிதும் கவரப் பெற்ருர். ஒருவேளை வட பகுதி முழுவதுமே ஜான் ப்ரெள&னப் போற்றி இருப்பின் தோரோ அதிகக் கவலே எடுத்துக் கொள்ளாமல் இருந்திருப்பார். ஆளுல், அடிமை ஒழிப்பு இயக்கத்தினரில் கூடச் சிலர், ப்ரெளனே நன்கு வர வேற்கவில்லை. ஆதலால்தான் ப்ரெளன் ஒரு குறிக்கோள் வீரராகவும், நேர்மையும் நியாயமும் அற்ற ஒரு நிறுவனத் துடன் ஒற்றையாக நின்று போர் புரிபவராகவும் தோரோ வக்குக் காட்சியளித்தார். பாஸ்டனில் சம்பாதித்த பணத் 121