பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துடன், தெற்கே உள்ள வெர்ஜினியாவுக்குச் சென்ருர் ப்ரெளன். ஹார்ப்பர்ஸ் பர்ரி என்ற இடத்தில் தாம் ஒற்றை யாகவே இருந்து கொண்டு அடிமை ஒழிப்பு இயக்கத்தை, தீப் பரவுவதுபோல் மாகாணங்களில் பரவச் செய்தார். மாகாணங்களில் பரவிய இக் கிளர்ச்சியைக் கண்ட தோரோ நியாயமான சட்ட மறுப்பு இயக்கத்தின் ஓர் அடையாள மாகவே ப்ரெளனக் கருதினர். ப்ரெளன் பிடிபட்டதும், சிறைபடுத்தப்பட்டதும், காப்டன் ப்ரெளனுக்காக ஒரு. வேண்டுகோள் - என்ற கட்டுரையை எழுதுமாறு தோரோ வைத் துரண்டியது. நியாயமற்ற நிறுவனத்துடன், நியாய முடையவன் போராட வேண்டுமாயின் என்ன முறையில் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பவற்றை உணர்ச்சி மிக்க அந்தக் கட்டுரையில் தெரிவித்தார். ராஜத் துரோகக் குற்றம், கொலைக் குற்றம் என்ற குற்றங்கள் சாட்டப்பட்டு ப்ரெளன்.தண்டிக்கப்பட்டார். அடிமை ஒழிப்பு இயக்கத்தின் கோட்டை என்று கூறப்படும் மெஸ்சூஸிட்ஸில், ப்ரெள&னப் பற்றி, ஒரு பரிவான வார்த்தைகூட எழுதப் பெறவில்லை. இதனெதிராக, எவ்வளவு அவமானமும் ஆபத்தும் வருவ தாயினும் அவை பற்றிக் கவலேப்படாமல் தோரோ ப்ரெள னுக்காகப் பேச முடிவு செய்தார். அவருடைய நண்பர்கள் எவ்வளவோ தடுத்தும், தோரோ இது பற்றித் தம் மனத்தில் முடிவு செய்து கொண் டார். ஜான் ப்ரெளன் சிறைப்பிடிக்கப்பட்டவுடன், ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் ப்ரெளன் சார்பாகத் தாம் பேசினுர், அவருடைய சொல்லாற்றல் * அனேவரையும் மிக்க மரியாதையுடன் கேட்குமாறு செய்த, துடன், பலர், இவ்விஷயத்தில், தாங்களே வியப்படையும் முறையில் பரிவு கொண்டனர் - என அங்கிருந்த எமர்ஸன், தம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார். இம் முறையில் ப்ரெளன ஆதரித்து முதன் முதலில் வெளிப்படையாகப் பேசிய முதல் அமெரிக்கர் தோரேசதாம். தனிப்பட்ட மனிதர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டப் பலியானவர் ப்ரெளன் என்றும், கொள்ள காரணமாக, நேர்மையற்ற அரசாங்கத்தால் பலி வாங்கப்பட்டவரென்றும் கூறிஞர்; ஆயிரத்து என் ணுறு ஆண்டுகட்கு முன்னர் கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்தனர்; இன்று காலை காப்டன் ப்ரெளன் தூக்கிலிடப் பட்டார். ஒரு சங்கிலியின் இந்த ஒரு முனைகட்கும் இடையே 122