இரண்டுமே ஓரளவுதான் வரலாருக அமைந்தன. அவை முறையே 1882 இல் சான்பர்னலும், 1873 இல் சானிங் காலும் எழுதப் பெற்றன. பாபியன் சோஷலிஸ்டாகிய ஹென்றி ஸ்ால்ட் முற்றிலும் தோரோவின் கொள்கை களில் ஊறினவராவார். தோரோவை நேரில் அவர் சந்திக்கவே இல்லை எனினும், தோரோவின் கருத்துக்களே, சேனிங், ஸான்டர்ன் என்ற இருவரைக் காட்டிலும் அதிக மாக உணர்ந்தார். உலகிற்கு ஒரு செய்தியைக் கூறவந்த தோரோவின் வரலாற்றைப் பலர் எழுதி இருப்பினும், ஸ்ால்ட்டினுடையதே மிகவும் சிறந்ததாகும். - மிகவும் பிரபலமாக அறியப்படாவிடினும், அவருடைய கவிதை, இயற்கை வருணனை, எளிய வாழ்க்கை பற்றிய செய்திகள் என்பவற்றைப் பலரும் அறிந்திருப்பார்கள் என அவருடைய நண்பர்கள் எதிர்பார்த்தார்கள். நாற்பது ஆண்டுகளாக இருளில் மறைந்திருந்த அவருடைய புகழ், இறுதியாக வெளிப்படுமென்பதையும், அதுவும் அமெரிக் காவில் அல்லாமல் இங்கிலாந்தில் வெளிப்படுமென்பதையும், அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. தோரோவின் செய்தியை ஏற்றுக் கொள்ள, பத்தொன்பதாம் நூற்ருண்டு பக்குவ மடையவில்லை. இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில், பிரிட்டனின் நகரங்களில் காணப்பட்ட அழகற்ற, ஒரே மாதிரியான வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்புக் காரண மாக, அங்கேதான் தோரோவின் செய்தியை முதன் முதலில் உணர்ந்தார்கள். விடுதலை பெற்ற வாழ்வில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது; தேங்திக் கிடந்த விக்டோரியா காலத்தைய சாதி, சமய மரபுகளின்மேல் துய காற்று வீசத் தொடங் கியது. பிரிட்டனில் தொழிற் கட்சி தோன்றிற்று ; அறிவு வாதம் தலே தூக்கியது. சைக்கிள் வண்டி நன்கு அமைக்கப் பட்டமையின், பிரிட்டனில் உள்ள நகர வாசிகள், சூரிய வெளிச்சத்தையும், தூய காற்றையும் விரும்பி ஊருக்கு வெளியே புறப்பட்டனர். இப் புதிய இயக்கம் அதற்குரிய இலக்கியத்தைத் தோற்றுவித்தது. ரஸ்கினும், மோரி ஸ்சம் இதனைச் சேர்ந்தவர்கள். ஆணுல், தோரோ, விட்மன், எட்வர்ட் கார்ப்பென்டர் ஆகியவர்கள் பரந்த முறையில் தம் செல்வாக்கைச் செலுத்தியமையின், அவர் களைப் பின்பற்றி ஒரு கூட்டமே தோன்றிற்று. திறந்த சாலே என்ற பெயருடன் 1899 இல் ஈ. வி. ல்யூகாஸ் 128
பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/134
Appearance