பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தயாரித்த கவிதை, உரை நடைத் தொகுப்பு நூலில் : தோரோவின் கவிதை இடம் பெற்றது. அக் கவிதை க. அடிக்கின்ற காற்றை மட்டும் அனைவரும் அறிவர் தாமே ?? என்று முடிந்தது. கிராம வாழ்க்கையையும், மண்ணுடன் நெருங்கி உறவு கொள்ளும் வாழ்க்கையையும் நகர்வாழ் மக்கள் விரும்பி நின்றதற்கு விடையளிப்பது போல் அமைந்தது, தோரோவின் குடிசை வாழ்க்கை பற்றிய வரலாறு. ஒரு துண்டு நிலத்தில் கடன் வாங்கிய கோடரி யுடன் வாழத் தொடங்கிய ஒருவர், குடிசை ஒன்றையும் அமைத்துக் கொண்டு, சுதந்திரமாகவும், ஒய்வாகவும் ஒரு கட்டை, மரங்கள், விலங்குகள், பறவைகள் என்பவற்றுடன், நாள் வந்து செல்லும் பார்வையாளர்கள் ஆகியோரின் ஒரு துணை கொண்டே வாழ்ந்தார் என்ற வரலாறே வியப் பானது. இந்த மனிதருடைய திண்மையான பண்பாடு, மனத் தூய்மை, கூர்ந்து நோக்கும் இயல்பு, ஆழ்ந்த அறிவுத் திறன் என்பவற்றை, இவர் நூல்களைக் கற்போர் பாராட்டி இவரைப் போல் நடக்க விழைந்தனர். தோரோவைப் பற்றிப் பிறர் அறிந்த இப் பகுதியன்றி, பிறர் காண முடியாததாய், அவருடைய நாட்குறிப்பில் மட்டும் ஒரோவழிக் காணக்கூடியதாய் உள்ள சில பண் பாடுகளும் இருந்தன. இவற்றைப் பொது மக்கள் அறிய முடிந்ததில்லை. இந்தத் தோரோ குழப்பம் நிறைந்தவராய், தம்மையே நன்கு அறியாதவராய், தம்முடைய வாழ்க்கை யில் ஏற்பட்ட ஏமாற்றத்தின் அளவு என்ன? தன்மை என்ன? என்பவற்றைத் தெரியாதவராய் இருந்தார். ஆனல், தம் இயல்பின் இந்தப் பகுதியை அவர் உலகிற் குக் காட்டவே இல்லே , தம் உற்ற நண்பர்களிடமும் காட்ட வில்லை. அவருடைய உடல் நிலையின் காரணமாகப் பல சமயங்களில் ஆழ்ந்த துயரம் ஏற்பட்டாலும், அவருடைய புற வாழ்வு பெரிதும் மகிழ்ச்சி யுடையதாகவே கழிந்தது. உலகின் ஒரு பகுதியாகிய தம்முடைய ஊரின் இயற்கை வரலாற்றை எழுதுபவராக அவர் அமைந்தார். இத்துறை யில் ஸெல்பர்னேச் சேர்ந்த கில்பர்வைட் என்ற இயற்கை வரலாற்று வல்லுநரைப் போலவே தோரோபுேம் விளங் கினர். கில்பர்வைட்டைப் போலவே இவரும் சமுதாய, நீதிப் பிரச்னைகளிலும், தத்துவம், இலக்கியம் என்பவற்றிலும் சுற்றுப்புற மக்களிலும் கருத்தைச் செலுத்தினர். ஆலுைம், 9 129