பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைதியாகப் படுத்திருந்த ஆமை மெள்ள ஊர்ந்து செல் கிறது. நீர் குறைந்துள்ள கரைப் பகுதிகளில் நீர் ஊற்றுக்கள் நீரைக் கொப்பளிப்பதை உங்களுடைய கால்கள் உணர் கின்றன. திடீரென்று நீரில் தோன்றும் குளிர்ச்சியே ஊற்று நீர் அவ்விடத்தில் ஆற்றில் பாய்கிறது என்பதை அறிவிக் கிறது. உங்கட்கு நீர் வேட்கை ஏற்பட்டால் அந்த இடத்தில் மணலில் கையால் சிறிது தோண்டிச் சிறிது நேரங் கழித்து வந்தால் தெளிந்த நீரை உண்டு களேயார முடியும்' என்று எழுதியுள்ளார். தமக்குள்ளேயே பல போராட்டங்களும், மன உளைச்சல் களும் ஏற்படுவதை அவர் நன்கு அறிந்திருப்பினும் பல நாட்களே இன்பத்துடனேயே கழித்தார். மாலே நேரங் களேச் சமுதாயத்திற்கு அவர் விற்றுவிட வில்லை; விற்கப் போவதுமில்லை. வாழ்க்கையில் ஒரு பெரும் பகுதியை, இயற்கையை அமைதியாகக் கூர்ந்து நோக்குவதற்கு என்றே அவர் ஒதுக்கினர். அன்ருடம் எடுத்த குறிப்புக்களே விரிவாக்கிச் சொற்பொழிவாக உருக் கொடுத்து காங்க் கார்டிலும், க்ளின்டன், வொர்செஸ்டர், பெட்ஃபோர்டு, லிங்கன், ப்ளிமத் ஆகிய ஊர்களிலுள்ள சொற்பொழிவு மண்டபங்களிலும் சொற்பொழிவாற்றினர். இச் சொற் பொழிவுகளிற் பெரும்பாலானவை ஒய்வுநாட் சுற்றுலாக் களைப் பற்றியவையாகும். அவருடைய இருபத்தைந்தாவது ஆண்டு முதல் முப்பதாவது ஆண்டுக்குள்ளாகப் பல்வேறு முறைகள் ஆராய்ச்சிப் பயணம் சென்று வந்துள்ளார். இப் பயணங்களில் காங்க்கார்டின் மேற்கேயுள்ள குன்றுகள், வாசூஸெட், ஹல்லேக்ஸ், கேட்ஸ்கில்ஸ், கடாதின் ம&லப் பகுதிக் காடுகள், கேப் காட், கனடா ஆகிய பகுதிகட்குச் சென்றுள்ளார். அந்தச் சொற்பொழிவுகளிலிருந்து திரட்டப் பட்ட பலகட்டுரைகள், க்ராஹம், 'பட்ளும் மாத இதழ், 'தி யூனியன்' ஆகிய இதழ்களில் அச்சிடப் பெற்றன. பிர பாண நூல்கள் எழுதுபவர் என்றும், இலக்கியம், வாழ்க்கை என்பவைபற்றிப் பல கருத்துக்களை உடையவரென்றும் அவரைப்பற்றிக் கூறத் தலைப்பட்டனர். விஞ்ஞானத் துறையிலுள்ள ஒரு சிறு கூட்டத்தார் அவரை ஓர் இயற்கை வாதி என மதிக்கத் தொடங்கினர். ஐரோப்பாவிலிருந்து, அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டுக்கு வந்து, அமெரிக்க வன விலங்குகளேப் பாகுபாடு செய்ய முற்பட்ட லூயி 79