பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110வல்லிக்கண்ணன்

 கவிஞர் என்று சொல்லித் திரிந்த ராஜாவை சுற்றி வளையமிட்டு மயங்கிக் கிடந்தது கலை உலகத்தினருக்கு அதிசயமாகத்தான் தோன்றியது.

ராஜா பணக்காரன் அல்ல. புகழ் மிகப் பெற்றவனும் இல்லை. ஏதோ சுமாராக பணம் வந்து கொண்டிருந்தது அவனுக்கு. எப்படியோ வாழ முயன்ற அப்பாவி அவன். ஆனால் ஆள் அழகாக இருந்தான்.

இந்த கடைசி தகுதிதான் தேவகியை வசீகரித்த காந்த சக்தியாக உதவியது. வெறும் ராஜாவாக-அல்லது அவன் சொல்லிக் கொண்டது போல கவி. ஏ. ராஜா என்று-அலைந்த அவனுக்கு கார் சவாரி, காதல் அனுபவம், செலவுக்கு பணம் மற்றும் வாழ்க்கை வசதிகள் எல்லாம் திடீரென்று வந்து சேரவும், அவன் உண்மையிலேயே ராஜா மாதிரி பொழுது போக்க முடித்தது. -

'அவனுக்கு வந்த அதிர்ஷ்டம்’ என்றும் 'யோகம்' பாக்கியசாலி-கொடுத்து வைச்சவன்' என்றும் பலரும் பலவாறு பேசி பெருமூச்செறியும்படியாக அவனுடைய வாழ்க்கை மாறி விட்டது. பிறர் அபிப்பிராயங்கள் பற்றி என்றுமே அவன் கவலைப்பட்டதில்லை.

தேவகியும் அப்படித்தான்.

ஆகவே அவள் அவனை தனது ராஜாவாக ஏற்றுக் கொள்ளத் துணிந்தது போலவே, அவன் அவளை தன் ராணியாக வரித்துக் கொண்டான்.

நாம் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு வாழலாம். எப்போ திருமணம் வைத்துக் கொள்ளலாம்? நம்ம கல்யாண விழாவை சீக்கிரமே நடத்தி விடலாமே, என்று அவள் அடிக்கடி கூறி வந்தாள்.

தன் வாழ்வில் திடீரென வந்த வசந்தத்தை நிலையானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை