பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114வல்லிக்கண்ணன்

 காரும், பங்களாவும் வாங்கினான். அவனாகவே கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாள் குறித்துக் கொண்டு, மகிழ்ச்சியோடு தேவகியை சந்திக்கப் போனான்.

அவன் கனவிலும் கருதியிராத அவனுடைய மகா கவித்தனம் கற்பனை கூட செய்ய முடியாத வரவேற்பு அவனுக்காக காத்திருந்தது தேவகி வீட்டில்.

'‘’அம்மா வீட்டில் இல்லை. நீங்க யாரு?" என்று கேட்டு, அவனை வாசலிலேயே தடுத்து நிறுத்தினான் புதிய காவலாள் ஒருவன்.

கவியின் முகத்தில் ஓங்கி அறைந்தது மாதிரி இருந்தது அச்செயல். அவனுக்கு கோபம் கொதித்து இந்தது. ‘’ஹெஹ், நான் யாரா? இந்த வீட்டிலே என்னிடமே அப்படிக் கேட்க ஒரு ஆளா? ஹெ ஹ..:‘’ என்று உறுமினான் அவன்.

‘’யாரப்பா அது, வழி தவறி வந்து விட்ட நடிக சிகாமணி?'’ என்று கிண்டலாகக் கேள்வி எறிந்தபடி தேவகி வெளியே வந்தாள். வாசல்படி ஒரத்தில் ஒய்யாரமாக நின்று, அலட்சியமாக அவனைப் பார்த்தாள். ஓ, மகாகவியா? பேஷ்! ஜீவசத்து அளவுக்கு அதிகமாகி விட்டதோ?’' என்று நையாண்டியாக சொல் வீசினாள்.

"மகாகவியை பேட்டி காண இந்த நடிகைக்கு இன்று நேரமில்லை. சென்று வருக கவிஞரே!” என்று சொல்லி, முற்றுப்புள்ளி போல் களுக்கென ஒரு சிரிப்பு சிந்தினாள். மின்னல் மகள் என நடந்து மறைந்தாள் தேவகி.

ராஜாவுக்கு உலகமே தலைகீழாக சுழல்வது போலிருந்தது. தன் தலையைக் கையினால் பற்றிக் கொண்டு