பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் 115

 தள்ளாடும் நடையோடு திரும்பினான். வந்த வழியே போனான்.

இந்த அனுபவத்தை அவன் மறக்கவே இல்லை. எப்படி மறக்க முடியும்? தேவகியின் மாறுதலை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை. அவளை. அவள் பண்பை. மனநிலையை. எத்தகைய பெரும் பிசகு என்பதை நினைக்கும்பொழுது கவிக்கு மன வேதனை எழுவது உண்டு.

தேவகி, மாதவன் எனும் அழகன் ஒருவனை தனது ராஜாவாக ஏற்றுக் கொண்டிருக்கிறாள் என்ற செய்தி கலை உலகில் வேகமாக பரவியது. அவன் சாதாரண நடிகன்; சுமாரான புகழும், பண வருவாயும் உடையவன். எனினும் ஆள் அழகாக இருப்பான் எனும் உண்மைகளை அறிந்தவர்கள் மாதவனின் அதிர்ஷ்டம் என்றார்கள். ராஜா. ஐயோ பாவம்!' என அனுதாபம் உதிக்காதவர் எவருமில்லை என்றே சொல்ல வேண்டும்.

கவி ஏ. ராஜா யோசித்தான். யோசித்துக் கொண்டே இருந்தான், அவனுடைய சிந்தனை மண்டலத்தில் குழப்பம் கவிந்திருத்தது. அது மாறிப் புரண்டு மின்னொளி தெறித்தது. அவனுக்கு தெளிவு ஏற்பட்டது. ஆமாம், சந்தேகமே இல்லை என்று திடமாகக் கூறியது அவனது மனக்குறளி.

தேவகி தன்னைவிட அந்தஸ்தில், புகழில், ஆற்றலில் குறைந்திருப்பவனைத்தான் அவாவுகிறாள். தனது தயவில் வாழ்வதாக அவன் நம்ப வேண்டும். அப்பதான் தனது இஷ்டம்போல் தன் கணவனை ஆட்டி வைக்க முடியும் என்பது அவள் எண்னம் என்று தெரிகிறது. தேவகியின் கணவன் எனும் தகுதியில் பிரகாசிக்கக் கூடிய ஒருவனே அவளுக்கு