பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 வல்லிக்கண்ணன்

 வெவ்வேறு போஸ்களில் எடுக்கப்பெற்ற கவர்ச்சிகரமான போட்டோ பிரதிகளையும் இணைத்து அனுப்பினார். தனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தால், அவர்கள் தயாரிக்கும் படம் பிரமாத வெற்றி பெறும் என்றும் உறுதி கூறினார்.

ஆயினும், அவருக்கு படத்தில் நடிக்கக் கூடிய சான்ஸ் எதுவும் தேடிவரவில்லை. பல கம்பெனிகள் பதிலே போடவில்லை. அவருக்கு வாய்ப்பு எதுவும் தருவதற்கில்லை என்று சிலர் வருத்தம் தெரிவித்து இருந்தார்கள்.

இதனால் எல்லாம் ராஜப்பா மனம் சோர்ந்து உட்கார்ந்துவிடவில்லை. அவர் வழக்கம் போல் சிங்காரித்துக் கொண்டு வீதிகளைச் சுற்றி வந்தார். கண்ணாடிமுன் நின்று ஆக்க்ஷன் பண்ணி: அகம் மகிழ்ந்தார். 'ஐயாவும் சினிமா ஆக்டராக ஜொலிக்காமலா போகப் போறாரு! எதுக்கும் ஒரு டைம் வரணும்' என்று தனக்குத் தானே 'நம்பிக்கை இன்ஜெக்க்ஷன்” கொடுத்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று ராஜப்பா திருநகரை விட்டுக் கிளம்பி விட்டார். சொந்தக் காரில்தான், சான்ஸ் நம்மை தேடி வராவிட்டால் நாமே சான்ஸை தேடிப் போக வேண்டியது! தான் என்று அவருடைய மனம் குரல் கொடுத்தது தான் காரணம் ஆகும்.

அவருக்குத் தெரிந்த - 'ரொம்பவும் வேண்டிய' - நாடக உலக அண்ணாச்சி ஒருவர் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு விட்டார் என்ற சேதி தெரிய வந்தது உடனடிக் காரணமாய் சேர்ந்தது.

மாநகரத்திலும் தனது தனித்துவங்களை விட்டுவிட விரும்பவில்லை ராஜப்பா. அருமையான சூழ்நிலையில் அமைந்திருந்த தனி வீடு ஒன்றை வாடகைக்கு