பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் 129

 அவள் அழகி. இனியவள். சொக்கும் சுகவிருந்து, இன்ப ஊற்று. அன்புத் துணைவி. இதை ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்ந்தார் அவர்.

"என்னய்யா, உம்ம நோக்கிலே நீர் வெற்றி அடையலே போலிருக்கே?' என்று அவருடைய திருநகர் நண்பர்கள் ராஜப்பாவிடம் துக்கம் விசாரித் தார்கள்’.

அவரோ கவலை துளிகூட இல்லாதவராய் உல்லாசமாய் சிரித்தார்.

‘ஒரு வகையில் நஷ்டம், இன்னொரு விதத்தில் லாபம் என்று சொல்லலாம். பிசினஸில் பணம் நட்டமானால், அறிவுக் கொள்முதல் லாபம் ஆகும். எனது கலை ஈடுபாட்டில் என்னுடைய நடிப்பு ஆசை தோல்வியில் முடிந்தது. அது சரி, ஆனால் அந்த முயற்சி எனக்கு வேறொரு வகையில் வெற்றியாக முடிந்துள்ளது. ஈடு இணையில்லாத அருமைக் கல்யாணி எனக்கு இனிய தோழியாய், துணையாய் கிடைத்திருக்கிறாளே! அது பெரிய லாபமில்லையா? என்று மிகவும் மகிழ்ந்து போனார் அவர்.

தனிப்பட்ட முறையில் ராஜப்பாவுக்கு இன்னொரு சந்தோஷமும்கூட. குமாரி கல்யாணி முகச் சாயலில், இனிய சிரிப்பில், கன்னம் குழிதலில் அவருக்கு மிகுதியும் பிடித்திருந்த ஸ்டார் நடிகை ஒருத்தியை ஒத்திருந்தாள்.

★'செளராஷ்டிர மணி' தீபாவளி மலர்-1987