பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 ★ வல்லிக்கண்ணன்

கொண்டிருக்கிறார். திடீரென்று ஆ! ஆகா! என வியந்து கொள்கிறார். நல்ல வெயில் நேரம். துரத்தில் ‘குளு குளு’ என்று வேப்ப மரங்கள் நிழல் பரப்பி நிற்கின்றன. ஒரு இடத்தில் ஒற்றை ஒரு மரம். அதன் நிடில் குளுமையாகப் பரவிக்கிடக்கிறது. அது அவரை ஈர்க்கிறது. இப்படியே இந்த இடத்தில் இறங்கி விடனும்; அங்கே போய் அந்த மரத்தடி நிழலில், துண்டை விரித்து, ஹாயாகப் படுத்துக்கிடக்கனும், நேரம் பற்றிய நினைப்பே இல்லாமல், போக வேண்டிய இடம்-பார்க்க வேண்டிய ஆட்கள்-செய்ய வேண்டிய வேலை என்கிற எந்த கவலையுமே இல்லாமல், சுற்றுப் புற அழகில் சொக்கிப்போய் சுகமாக கிடக்கணும். இது அவரது மனதின் நினைப்புகளில் ஒன்று.

நீண்டதுரம் பயணம் போய்க் கொண்டிருக்கிற ரயில் வண்டி அநேக பெரிய ஸ்டேசன்களையும், பல சின்னச் சின்ன ஸ்டேசன்களையும் கடந்து போகிறபோது, இடைவழியில் ஏதோ ஒரு ஸ்டேசனில் இறங்கி, நடந்து போய் புதிய இடத்தில் எதிர்ப்படக் கூடிய அனுபவங்களை சந்திக்க வேண்டும்.

பயணங்களின் போது, ஆங்காங்கே பெரிய பெரிய ஆறுகள் வரும் ஏதாவது ஒரு ஆற்றின் கரையில் இறங்கிவிட வேண்டும். அந்தக் கரை மீதாகவே நடந்து போய், புதுப்புது இடங்களைக் காணவேண்டும். மனசுக்குப் பிடித்த ஊர் எதுவேனும் தென்பட்டால், சிறிதுகாலம் அந்த ஊரிலேயே தங்கிவிட வேண்டும். அந்த ஊரும் அங்கே தங்கியிருப்பதும் அலுத்துப் போனால், மீண்டும் ஆற்றின் கரை வழியே நடந்து போகவேண்டும்...

அவர் செல்லமாய், சீராட்டி வளர்த்த நினைப்பு ஒன்றும் உண்டு.