பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்திகரமான ஏற்பாடு




தொழில் அதிபர் செல்வநாயகத்துக்கு முதல் பார்வையிலேயே அந்த இளைஞனைப் பிடித்து விட்டது. பிறகு சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர் அவனை ஆராயும் கண்களோடு நோக்கினார், அவன் அவர் மனசில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ளும் தகுதிகளை உடையவனாகவே தென்பட்டான்.

“இவனை நம்ம ஆளாக ஆக்கிவிட வேண்டியது தான்” என்று அவர் எண்ணினார். “இது ஒரு பிசினஸ் டீல் வெற்றிகரமாக முடியவேண்டும்” என்று அவர் மனம் ஆசைப்பட்டது. ‘முடியாமல் என்ன? ஐயாவாள் நோட் பண்ணி, நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்து, திட்டமிட்டுச் செயலாற்றிய எதுதான் வெற்றிகரமாக, லாபகரமாக நிறைவேறவில்லை?’ என்று அவரது மனசின் இன்னொரு பகுதியே தன்னகங்காரத்தோடு கொக்கரித்துக் கொண்டது.

அவனை தனியாச் சந்தித்துப் பேசவேண்டும் என்று விரும்பி, தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவர்.

அன்று மாலையே உரிய சந்தர்ப்பமும் வாய்த்தது.

நாகரிக நகரத்தின் நவநாகரிகத்துக்கும் ஸ்டைலான பழக்க வழக்கங்களுக்கும் பெயர் பெற்றிருந்த அந்தப் பெரிய ஓட்டலின் விசாலமான புல்வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போட்டிருந்த மேஜை நாற்காலிகளில் ஒன்றில் அவன் தனியாகக் காணப்