பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 ★ வல்லிக்கண்ணன்

தந்த நேரங்கள் அவ்விருவரையும் சித்திரவதை செய்யும். குளிர் நிறைந்த அதிகாலை வேளைகள், காலத்தாலும் உழைப்பாலும் மெலிந்துவிட்ட அவ்வுடல்களை வெகுவாகச் சோதிக்கும். அத்தகைய நாட்களில் பல தினங்கள் அவர்களால் உழைக்க முடியாமல் போகும். உழைக்க ஆசை இருக்கும் உள்ளத்தில், ஆனால் உடலில் தெம்பு இருக்காது. அப்போதெல்லாம் அவர்கள் பட்டினி கிடக்க வேண்டிய அவசியமே ஏற்படும்.

அண்டை அயலார்கள் அபூர்வமாக எப்பொழுதாவது உதவி செய்வார்கள். ஒரு சில காசுகள்; ஒரு வேளை உணவு. சில சமயம் எப்பொழுது ரசம் அல்லது குழம்பு என்று உதவலாம். வாழ்க்கைக்கு தீயில் புடம் போடப்படுகிற சாதாரண மக்கள் வேறு என்ன உதவியைச் செய்யமுடியும்?

இவ்வித மனிதர்களுக்கு இயற்கை அணையாக நின்று உதவிபுரிய வேண்டும் எனும் அவசியமில்லையே. மேலும், இயற்கை இஷ்டம் போல் புரிந்து மகிழும் குறும்புத்தனச் சிறுவன் மாதிரி நடந்து கொள்கிறதே! பாடுகிறவர்களது உழைப்பின் பலன் எல்லாம் பாழாகும்படி—அவர்கள் நெஞ்சில் நெருப்பில் மூண்டெழவும், வயிற்றில் தீராத எரிச்சல் குடிபுகவும்—வழி செய்வதுக் இயற்கையின் போக்கிரித்தனமேயன்றோ? வேண்டாத பொழுது கடும் மழையைக் கொட்டியும் தவைப்படுகிற போது சுட்டெரிக்கும் வெயில் வீசியும், அவ்வப்போது புழுதிப் புயலையும் குறைக் காற்றையும் அனுப்பியும் வெறியாட்டம் போடவில்லையா? அதன் கூத்து மனிதருக்கு வேதனையாக முடிகிறது.

கிழவனும், கிழவியும் உயிரைக் கொடுத்து உழைத்தார்கள். மண்ணை நம்பி விதை விதைத்தார்கள்.