பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覓62 லா. ச. ராமாமிருதம்

மூலையிலும் விடுங்கினால்? தைைய ஒழுங்கா தலையணை யில் சாச்சு எங்கு படுத்தேன்?

சரி இன்னிக்கு செங்கோலைக் கீழே வெச்சாச்சு. இதே நேரம் நாளைக்கு நான் பஜாரிலே நடந்து போறேன் எதிரே எவர்சில்வர் பாத்திரக் கடையிலே நுழையறேன்: 'ஐயா நா டா ரே முனு நாளா அதோ அந்த எண்ணெய்க் கிண்ணத்தைப் பார்த்து ஆசைப்பட்டிட்டு இருக்கேன். ஏதோ என்னால் ஒரு சமயமில்லாட்டி ஒரு சமயம் உங்க வியாபாரத்திலே சகாயம் செஞ்சிருப்பேன். சும்மாத்தான் கொடுங்களேன், நேத்திக்கு கேட்டா லஞ்சம், இன்னிக்கு கேக்கறேன் ஆசைமேலே!’ நாடார் என்ன பதில் சொல்வார் தெரியுமா? 'சாமி, நேத்திக்கு கேட்டிருந்தா க ண் டி ப் ப க கொடுத்திருப்பேன். எண்ணெய்க் கிண்ணி என்ன? பாய்லரே கொடுக்கலாம்? நாங்களும் அததுக்கு ஒரு கணக்கு வெச்சிருக்கோமில்லே. ஆனால் நீங்க வளைஞ்சே கொடுக்கல்லே. எங்களுக்கு லஞ்சமாக் கொடுக்கத்தான் கட்டுப்படியாகும். ஆனால் ஒரு எண்ணை முட்டை கூட விலையில்லாமல் கொடுக்கக் கட்டுப்படி ஆவாதுங்களே?”

சாமி ஒண்னு சொல்றேன், நீங்க நாலு இடம் போனவங்க. நான் இன்னும் ஊர் எல்லையைத் தாண்டின வனில்லை. உங்களுக்கு இன்னும் தெரியல்லே, எங்களுக்குத் தெரியும். இமயத்திலிருந்து குமரிவரை மனிதனின் அடிப் படை சுபாவம் ஒண்னேதான். நீங்கதான் தெனாலி ராமன் கதை மாதிரி மாத்தனும்னு பாக்கறிய. அது ஒரு நாளும் நடக்காது. உங்களையே பாத்துக்குங்க, களங்கம் இல்லாதவங்க யாரு? நீங்க வந்ததுக்கு இப்போ ரத்தக் கொதிப்பில் உங்க முகத்தில், உடம்பில் எத்தனைக் கருப் புப்புள்ளி கூடி இருக்கு நிறத்துக்கே இப்படி ஆச்சுன்னா நெஞ்சில் கறுப்பை அறிய நீங்களும் நானும் யாரு?

சரி. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கெங்கேயோ போய் இங்கே வந்து நின்னுட்டேன். இல்லை நான்ா நிறுத்க்தி