பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 லா. ச. ராமாமிருதம்

மாவடுவைக் கடித்தாற்போன்று, வெடுக்கு வெடுக் கெனப் பேச்சில் ஒரு துடுக்கு. தொட்டதற்கெல்லாம் செவி மடல் செவந்து, மூக்கு நுனி துடிக்கும் கோபம். அ ண் ண ன் மார் அத்தனைபேரையும் 'வாடா", 'போடா”, கேதாரியைக் கேது”, ராகவனை ராகு” அப்பாவைக்கூட நீ தான். யாரையும் துர்க்கியெறியும் GLää. Don 't Care.

அப்பாவுக்கு அவள் 'பொன்னுத்துரை' பெயரின் அன்பு இன்பமாயிருந்தாலும், அதில் ஏதோ சிலாம்பு குத்திற்று.

'என்னப்பா, வர்க்கத்தையே மாத்திட்டே?” அப்பா பத்திரிகைமேல் ஒடிய கண்கள் மாறாமலே : 'இந்த நாளில் எது நடக்கவில்லை ? அதுவும்தான் தடக்கிறது '

'பொன்னு பெண்ணாவா வளர்கிறாள் ?' என்று மற்றவர் பேசிக் கொள்வதும், காதுக் கெட்டாமல் இல்லை.

  • Don't care. ஆனால் அதற்கென்ன செய்வது தாயில்லாக் குழந்தை. அதிலும் கடைக் குட்டி விதை விழுந்த இடத்தில், விட்ட வேரின் கெட்டிக்கேற்றபடி முளைத்த செடி போல், தாயின் பயிரும், பதியமும், வேலியும், இல்லாது வளர்ந்தால் அப்படித்தான். ஆண்களுக்கு நடுவே, “நீ குடுமியைத் தட்டி முடிந்தால், நான் கொண்டையை எடுத்துக் கட்டிக்கறேன் : உனக்கு நான் தோற்றேனா?” என்கிற ரீதியில் வளர்ந்தால், அப்படித் தான். அதுவும் அவளுக்கே தெரிந்தது.

முதலில் இந்த நாளில் குடுமி ஏது ? ஆனால் கொண்டையும் ஏது? சவுரியும், கொண்டை போன்ற கலவடையும் தான்.