பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனி # 17

எதிலும் மெய்யென்று ஒன்று உண்டு என்பதே மறந்து போனவரை போலி பெருகிப் போன வாழ்நாள். அதன் சூத்திரம் :

Don’t care. முதல் சூடு சரியானபடி விழுந்துவிட்ட தோஷம், நெருப்பையே மறுத்து, சூழ இருந்தவர் அவர் சொல்லுக்கு எதிர்ச் சொல் இல்லாது, செல்லம் காட்டிக் காட்டி , மேலும் மேலும் அவள் மேல் நெய்த இன் மொழிக் கூட்டில் இயங்கி இயங்கி, எதையும் விரும்பிக் கேட்கும் தேவையே அற்றுப்போய், உலகமே தனக்குரிய கப்பமாய் மடியில் விழுந்துவிட்ட பட்சியாய்த் தோன்றிய சூழ்நிலை யில் அவள் மொழியறிந்த நாளிலிருந்து, 'Don't care'க்கு அடுத்தபடி bore' என்ற வார்த்தையை அர்த்தத்தின் முழுச்சுமையோடு உணர்ந்தாள்.

'மணி அய்யர் (கேசவன் போய் வருடக் கணக்காச்சு) இன்னிக்கென்ன டி.பன்? கேசரி, பஜ்ஜியா ? bore !”

'இன்னிக்கு என்னத்தை உடுத்திக்கலாம்? ஜவுளிக் கடையையே பிரிச்சுப்போட்டாலும் bore ஆய்த்தானி ருக்கு!”

'கேது, இன்னிக்கு Paradise இல் என்னடா ப்ரோக் ராம்? அதுவேதான் தொடர்ந்து ஒடறதா ? bore :”

"ராகு, இன்னிக்கு சபாவில் கச்சேரியா ? டான்லா? உன் favourite பித்துதான் பாடறதா ? ஹாலையே வாங் கிட்டையா ? உனக்குத்தான் பிடிக்கும், படு bore !”

"அப்பா இன்னிக்கென்ன கிழமை? இப்பத்தான் புதனா? ஐயோ, இந்த வாரம் போக இன்னும் மூணு நாள் இருக்கே!”

"ஏன் மூணு நாளைக்கப்புறம் ஏதாவது ப்ளான் போட்டிருக்கையா ?”

"இல்லேப்பா, அது தெரிஞ்சால்தான் தேவலையா : ஒரே bore அடிக்கிறதேப்பா. எங்கேதான் போவது:”