பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i i8 லா, ச. ராமாமிருதம்

சதுப்பில் கட்டிய கட்டடம்.

காலை, பல் துலக்கும் வேலைக்கு, சமையலறை நிலை வாசற்படியில் சுண்டு விரலால் நகத்தகலத்திற்கு மண் தெரிந்தது. பால் காய்ந்து காப்பி கலக்கக் காத்திருக்கும் நேரத்திற்குள், கால் பந்தளவுக்குப் பெரிதாய், அசிங்க மாய், பயங்கரமாய் வீங்கிப்போன கரையான் புற்று.

தெவிட்டலின் குமட்டல்.

காது அறத் தொங்கும் செட்டி நாட்டுத் தோடு போல் கழுத்தில் கட்டிக் கல்லாய்ச் சுமக்கும் நாட்கள்.

படிப்பு முடிந்ததும் வேலையில் அமர்ந்தான். நாளொரு அணியாய், ஏதேனும் சாக்கில் அண்ணன் அாரும், அப்பாவும் மேலே தங்கக் கவசமாய்ப் பூட்டிக் கொண்டிருக்கையில் அவள் வேலை செய்து கூலி கொண்டு வரத்தேவையே இல்லை. ஆனால் யாரேனும் பொழுதுக்கு ஒரு வழி சொல்லுங்கள்!

ஆனால் எதுவுமே அதன் புதுமை பூக்காத வரை தான். உடனே, நாருடன் மயிரில் சிக்குண்ட நேற்றைய மலர்ச்சரம் போல், அதன்மேல் சீற்றம்தான் எழுகின்றது. மயிர்க்கால் போனாலும் பிய்த்தெறியத்தான் தோன்று கிறது. லகுவாய்க் கழற்றப் பொறுமையில்லை. நேற்று மணம் தந்ததற்கு நன்றியில்லை, வாடலைக் கண்டாலே திகில். ஆண்டே பழகிப்போய், வளைந்து கொடுத்து அனுபவிக்கத் தன்மையில் இணக்கமில்லை. வேரில் <ಿಫಿ೬6೫೯೪.

வேளை மூலையில் அலுப்பு, தன் கபடச்சிசிப்புடன், அவள் கையும் ாலுமாய் கட்டப் பட்டுக் கயிறுடன் காத்திருந்தது. அதன் அணைப்புக்குப் பயந்து, அடுத்து அடுத்து மாறுதலைத் தேடி, அதில் தஞ்சம் புகுந்தாள். உண்மையில், அவள் தன்னிடமிருந்து ஓடிக்கொண்டே யிருந்தாள்.