பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 28 லா. ச. ராமாமிதம்

ஜாபர்கான்பேட்டை டெண்டில் உ ட் க ார் ந் து கொண்டிருப்பார்கள். வீட்டுக்கு அதுதான் கிட்ட, மலிவு. வாரத்துக்கு இரண்டு படங்கள் நிச்சயம். அப்பா, நானூறு மைல்தாண்டி, துார தேசத்தில் வீட்டுப் பரா மரிப்பு இல்லாமல் தனியனாய்க் கஷ்டப்படும் கவலையை மறக்க அதுதான் எல்லா விதங்களிலும் செளகரியம்.

'அட, அப்பாவிற்கு எப்படித் தெரிஞ்சுது? ஞான திருஷ்டியா ? அங்கிருந்தே ரிமோட் கண்ட்ரோலா?”

பையன்கள் மலர மலர விழித்துக் கொண்டு கேட்கையில், நிஜமாவே ஆச்சரியமா ? அல்லது கேலி பண்ணுகிறார்களா? திகைப்பு எனக்குத்தான். இந்தத் தலைமுறையை அ வ் வ ள வு .ே ல சா ய் ப் புரிந்து கொள்ள முடிகிறதா ?

அவர்கள் அம்மை, புவனத்தையே வயிற்றில் அடக்கிய ரஹஸ்யப் புன்னகை புரிந்து கொண்டு (உண்மைதானே! தாயார் இல்லையா?) அரிவாமனையில் வீற்றிருந்துகொண்டு, கத்தரிக்காயை அதன் முழுமை இற்றுப் போகாமல் நாலாய்ப் பிளந்து கொண்டிருக் கிறாள். புதிதாய் இடித்த காரத்தை உள் அடைத்து இன்று கத்தரிக்காய் எண்ணெய் வதக்கல் ; மைசூர் ர. ஸ் ம் . அப்பா, நேற்று வந்து நாளை வண் டி. வந்த சமயத்தில் பாவம், வாயக்கு வேணுங்கறதை... அங்கே மலை நாட்டுக் கத்தரிக்காய், பார்க்க வெண்ணெய் மாதிரி இருந்தாலும் அடிநாக்கில் கடுப்பாமே! லாலாக்கடை அல்வா கூட பழைய மாதிரியில்லையாமே ! நீங்கள் தான் எங்களுக்கு நினைப்பில்லைன்னு நினைச்சுண்டிருக்கேள். எல்லாம் அப்பப்போ விஜாரிச்சிண்டுதான் இருக்கேன். என்னதான் சொல்லுங்கோ, மெட்ராஸ், மெட்ராஸ்தான். தண்ணைக் காசு கொடுத்து வாங்கினாலும், ஏதோ சிடைக்கற தோன்னோ? புலிப் பால்னா புலிப்பாலைத் தருவிச்சுடலாமே! அதுதானே இங்கு விட்டுப் போகவே பயமாயிருக்கு: ஆமாம், போய்த்தான் மூணு மாசமாச்சே