பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 லா. ச. ராமாமிருதம்

அவர் முகமும் குரலும் எங்கோ தூரத்தில் கேட்கிறது. என் குரலே என்னுடையதாயில்லை. நானே எதிரொலி பாகி விட்டேன். எதனுடைய எதிரொவி :

'ப்ரம்மசிருஷ்டி இந்தப் புவனம், ப்ரும்மத்துக்குக் கண்ணாடி. பிரும்மக் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து வியந்துகொண்டிருக்கிறது.”

என்னிடமிருந்து இந்த வாக்குப் புறப்பட்டதுதான் தாமதம், வானத்தில் சிம்மம் உறுமிற்று. எங்கோ மழை பெய்கிறது.

அல்லது ப்ரும்மகோபம். குத்து விளக்கில் திரியை உள்ளுக்கிழுத்தாற்போல் தெருவில் போய்க் கொண்டிருந்தவனை எதிர்பாராத சமயத்தில் ஒரு வளைக்கரம் திடீரெனக் கைப்பற்றி உள்ளுக் கிழுத்துக் கொண்டு வாசற் கதவைப் படீரெனச் சாத்திக் கொண்டாற் போல் . நான் உள்ளுக்கு வாங்கிப் போனேன். அறையின் சுவர்கள் என்னைச் சுற்று சுற்று சுற்றின. சுற்றிச் சுழன்று உருகிப் பூமியோடு பிழம்பாகி, பூமி வானு டன் இழைந்து எங்கும் கண்ணாடி தோற்றப் பளிச்சில் பளிங்கு வியாபித்தது.

பூமியின் கோள வளைவின்மேல் ஒரு உருவம் படிப் படியாக எழும்புகிறது. முகம் தெரியவில்லை. முதுகு என் பக்கம். நடன நடையில் அசைந்துகொண்டு-வானுக்கும் பூமிக்கும் மதிலாய் நின்ற பளிங்கில் இதோ முகம் தெரிந்து விடும்.

"அப்பா! அப்பா!!” என்னை யாரோ தோளைக் குலுக்கிக் கத்தி, விழித்துக் கொண்டேன், -