பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்? 露遊

எல்லோரும் என்னைச் சுற்றி நின்றுக்கொண்டிருந் தனர். நான் சோபாவில் கிடந்தேன். கன்னன் என் தலையின் கீழ் தலையணையைச் சரி பண்ணிக்கொண்டி ருந்தான்.

"என்ன ஆச்சு?- எனக்கு உடம்பெல்லாம் துணியைப் பிழிந்த மாதிரியிருந்தது.

"என்ன ஸார், ஒரேயடியாய் எல்லோரையும் காப்ரா' பண்ணிட்டேள்? - நரசிம்மனிடமிருந்து பயம் நெடி வீசிற்று.

"என்ன ஆச்சு?”

'என்ன ஆச்சு? திடீர்னு என்ன சார், பேசிண்டே யிருந்தேள், வாயடைச்சுப் போச்சு? கட்டை போட்டமா திரி, உடம்பில் ஆட்டம், அசைவு, துவளல் ஒண்னு மேயில்லை, திறந்த கண் திறந்தபடி. இமைக்கவேயில்லை. கண்ணில் focus இல்லை. மாலைமாலையாய் பெருகறது. பார்வையில்லை. வெறிச்சினு ஒரே பாலைவனம். Empty. வேறு எனக்குச் சொல்லத் தெரியல்லே. கண்ணைப் பார்த்துதான் பயந்துட்டேன். கண்ணை இமைக்க முகத்தில் லேசாய் ஊதினேன். பூ உதிர்ந்த மாதிரி அப்படியே சாய்ந்து விழுந்துட்டேன். எப்படி அவ்வளவு லேசாய்ப் போனேன்? அப்புறம் தான் கண்ணனைக் கூப்பிட்டேன்-”

'அப்படியா ?”

ஆனால் எல்லாம் பழைய சுவர்ள்கதான். தென்னன் டைச் சுவரில் அதே பழைய வெடிப்புத்தான். மின்னல் போல் கொடி பிரிந்து ஓடிற்று. கூரையில் ஒட்டடை அலைந்தது.

க் l க்

ஒன்றும் புரியாமல் எல்லோரும் திகிலில் எதிர் அலறி னோம். மின் விசிறியில் அடிபட்டு ஒரு பெரும் சப்தம் பொத்தென்று என் மடியில் விழுந்தது.