பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置器磨, லா, ச. ராமாமிருதம்:

நொடியில் குருவியின் விழிகளில் கண்ணாடி தேங்கி விட்டது. வாய்மொட்டு லேசாய்த் திறந்துகொண்டது.

"என்ன இது நரசிம்மன்?’-என் குரல் நடுங்கிற்று. எனக்கு அழுகை வந்துவிட்டது. புன்னகை புரிந்தார். என்னிடம் கிடந்த புஷ்பத்தை இருகைகளிலும் எடுத்துக் கொண்டார். அவர் கண்கள் நிறைந்தன.

'இதுதான் நீங்கள் சற்றுமுன் காட்டிய பரபஞ்சக் கண்ணடி,’’