பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மன்னிப்பு

சாயங்காலம் அப்பா பூஜையில் இருக்கிறார். மேல் முண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, மார்மேல் கைகட்டி, நான் எதிரில் உட்கார்ந்திருக்கிறேன்.

அம்மா ஒரு ஒரமாய் நின்று கொண்டிருக்கிறாள். வெளியே அந்தி கரைந்து இருளுடன் குழைகிறது. தாழ்வாரத்தில் மெட்டி சப்தம் கேட்கிறது.

நீ சட்டென அறையுள் தோன்றுகிறாய். வந்து அம்மா பக்கத்தில் நிற்கிறாய்.

குத்துவிளக்குகளில் ஆடும் .ெ வ. வி ச் ச த் தி ல் , உன் பட்டுப் புடவையில் கருப்பும், நீலமும் விட்டு விட்டு மின்னுகின்றன. உன் முகத்தின் வெண்மை ஜ்வலிக்கிறது. உன் ப்ரஸ்ன்னம் அறை முழுதும் கமழ்கிறது. என் நெஞ்சில் சுடர் ஆடுகின்றது. மன்னி, நீ அம்பாள் மாதிரி யிருக்கிறாய்.

உன் கண்கள் அப்பாவை நோக்குகின்றன. அவை களில் பயமில்லை. சஞ்சலமில்லை.

"என்னை மன்னித்துவிடுங்கள்,' நீ அப்பாவை நமஸ்கரிக்கிறாய் ; உன் தலை குனிகையில், அழுந்த வாரிப் பின்னிய உன் கூந்தல் பளபளக்கிறது. சொருகிய கத்தி போல், கொண்டை யிலிருந்து ஒரு தாழம்பூ மடல் சீறி எழுகிறது.

அப்பா உத்தரணியில் தீர்த்தத்தை ஏந்திக் காத்திருக் கிறார். ஆனால் நீ வாங்கவில்லை, கைகளைக் கோர்த்துக் கொண்டு நிற்கிறாய்.

நீ வாங்கமாட்டாய், நீ வந்தக் காரியத்தின் முடிவு: தெரிந்துகொள்ளாது. நீ கேட்பது மன்னிப்பு. ஆயின் உணர்வது வேறு.