பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼岳垒 லா ச. ராமாமிருதம்

உங்களிருவரின் மனோபாவங்களும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் அ தி ர் ச் சி யி ல் என் நெஞ்சு 'கிண்ணென்கிறது. மன்னி, எனக்குப் பயமாயிருக்கிறது. மன்னி, தீர்த்தம் வாங்கிக்கொள். உனக்கு அப்பாவைத் தெரியாது. அப்பா தயை புரியுங்கள்.........

அப்பா புன்னகை புரிகிறார். நீ ஏன் மன்னிப்பு கேட்கிறாய்?

"எங்களை மன்னியுங்கள்!'

உத்தரணியில் தீர்த்தம் விளிம்பு கட்டி அசைவற்று திற்கிறது. அப்பாவுக்கு வயதானாலும் கை நடுக்கம் இல்லை. எனக்குத்தான் உடலே உதறுகிறது. கைகளை மார்போடு இறுக அழுத்திக்கொள்கிறேன். மன்னி, நீ தீர்த்தம் வாங்கிக்கொள்ள வேண்டும். இது எனக்குக்கன முக்கியமாகிவிட்டது. மன்னி வாங்கிக்கொள். அப்பா. மன்னியை தீர்த்தம் வாங்கிக்கொள்ளும்படிப் பண்ணு, அம்மா உன்னைத் தியானம் பண்ணுகிறேன்

-நீ ஏன் இதில் சம்பந்தப்பட்டுக் கொள்கிறாய்? இதற்கு நீ பொறுப்பு இல்லை. உன்மேல் எனக்கு எந்த விதமான கிலேசமும் கிடையாது.

"அவரை மன்னியுங்கள். எனக்காக அவரை மன்னி யுங்கள். 3 x

"மன்னி, மன்னி, உன்னையே நமஸ்கரிக்கிறேன், என் மேல் கிருபை கூர்ந்து எனக்காகவேனும் தீர்த்தம் வாங்கிக் கொள்ள மாட்டாயா?

நீ வாங்கமாட்டாய். ஆசியிலாத தீர்த்தத்தை வாங்கும் உத்தேசம் உனக்கு இல்லை.

அப்பா உங்களைத் தியானம் பண்ணுகிறேன். காலில் விழுந்து கேட்கிறேன். மன்னியுங்கள், உங்கள் மன்னிப்பில் குளிர்ந்து, உங்கள் ஆசியைப் பெற்ற தீர்த் தம் அளியுங்கள்.