பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிப்பு 薰莎家

நீ மன்னியை ஆழ்ந்து நோக்குகிறாய். உன் வார்த்தைகள் அளந்து வருகின்றன. - "நீ வந்து இந்தக் குடும்பம் இரண்டாக வேண்டும்

என்று.” -

தீர்த்தத்தைத் தரைமேல் ஊற்றுகிறாய் எனக்கு முதுகு சில்லென்கிறது. மன்னி பேசவில்லை. சட்டெனத் திரும்பி வெளியே சென்றாள். எனக்குப் பொறுக்கவில்லை. நானும் எழுந்து வெளியே வந்தேன்.

ஆனால் உன்னைத் தொடர எனக்குத் தைரியமில்லை. நீ போவதைப் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். இந்தத் தாழ்வாரம் இவ்வளவு நீளமா? இதுவரை எனக்குத் தெரிய வில்லையே! பாதியில் உன் நடை தளர்ந்து சோர்கிறது. சுவரின்மேல் சாய்ந்து முகத்தைக் கைகளில் புதைத்துக் கொள்கிறாய். உன் தோள்கள் குலுங்குகின்றன.

நான் மெதுவாய் வந்து உன் எதிரில் நிற்கிறேன். இருளில் உன் முகம் சரியாய்த் தெரியவில்லை.

நீ வீட்டுக்கு வந்ததிலிருந்து இதுவரை உன்னுடன் நான் ஒரு வார்த்தை பேசியதில்லை. ஆனால், இப்படி ஊமையாய் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நிற்கையில், உன்னோடு பங்கிட்டுக்கொள்ள ஆயிரம் இதய முகடுகள் எழுகின்றன. ஆனால் அவைகளுக்கு வேகம் தவிர உரு இல்லை. ஏது செய்வேன்? என்னென்று பங்கிட்டுக் கொள்வேன்?

திடீரென எனக்கு அடி வயிற்றிலிருந்து குமட்டல் எழுந்தது. வாயைப் பொத்திக்கொண்டு கொல்லைப்புறம் ஒடினேன். 'குபுக்...... குபுக்......குபுக்..." வயிற்றின் சுருட்டலில் அடி வயிற்றை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, குதிரை லாடமாய் வளைந்து மடிந்தேன்.

அப்பா உன்னைக் கரிக்கிறேன். அண்ணா உன்னைக் கரிக்கிறேன்.