பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 ல்ா. ச. ராமாமிருதம்

அந்த வேளை மாத்திரம் ஏன்?

நாங்கள் கூட எங்களுக்குள் கேலி பண்ணுவோம். 'கண் புளிச்சை எடுக்கவில்லை. பல் ஊத்தைப் போக வில்லை நேற்று மலத்தைப் பத்திரமாக வயிற்றில்கட்டிக் கொண்டு மூக்கைப் பிடித்துக் கொள்ள வேண்டிக் கிடக்கு? இந்த அழகை ஒருத்தரும் பார்க்கக் கூடாதாம். இதற்குக் கதவை வேறே சாத்திண்டும். உத்யோகமோ ஊர்க்கெல் லாம் நியாயம் தீர்க்கற உத்யோகம், ஆனால் இவாளுக்கு அகச்சுவடி நியாயத்தைத் தீர்த்து வைக்கறவா யாரு?"

அம்மா எரிச்சலுடன் மொண மொணப்பாள்.

ஆனால் உங்களுக்குத்தான் யார் அபிப்பிராயமும் எந்த விஷயத்திலும்தான் அக்கறை கிடையாதே!

அப்பா, நீங்கள் கடாத் தலையர். அப்பா, நீங்கள் இரும்புத் தலையர் அப்பா, உங்களை என்னென்னவோ ஏசி விட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் மன்னிப்பு என்பதே இல்லை என்று விட்டீர்களே. பின் என்னதான் உண்டு?

அவரவர் சக்திக்கேற்றபடி அறிந்து கொள்ள முடித் ததை அறிவதுதான் உண்டா ?

அப்படியானால் அப்பா, முன்னைவிட இப்போது உங்களை இன்னும் கொஞ்சம்புரிந்து கொண்டதாய் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

அப்பா, நான் அப்படி நினைத்துக் கொள்ளலாமோ? அது தான் உண்டோ

அப்பா, உங்களைச் சிந்தித்ததால், உங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய்ப் புரிந்து கொண்டேன்.

நிந்தனையும் ஒரு வழிபாடுதானா அப்பா? அதுவும் ஒரு வேஷம் தானா?