பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 லா. ச. ராமாமிருதம்

அன்றுஒன்று சொல்கிறேன். அன்று-என் கையில் எனக்கு நாளும் கிழமையும் அற்று என்றோ ஆகிவிட்டது. அதைப் பற்றி எனக்கு அக்கறையுமில்லை. அன்று, இன்று, இனி என நாம் நியமித்த ஏற்பாட்டில் நாம் உழம்பிக்கொண் டிருப்பது என்றும் உள்ள இன்றுதான் சென்று போனதை நொந்து, இனிக் காய்த்துத் தொங்கப் போவதை நம்பி, கைப்பிடியில் விரலிடுக்கில் வழியும் இன்றை ஏமாந்து போவதை என்றேனும் எண்ணுகையில் சிரிப்பு ஏன் வராது ? அழுவதற்குப்பதில் சிரிப்பு. அன்றிலிருந்து பாய்ந்துகொண்டிருக்கும் ஜீவ நதியின் ஒசையே இதுதான்.

அன்று- - நான் குளித்துவிட்டு இடுப்பில் ஈரமுண்டுடன் திடுதிடு மென மாடியேறுகையில், பால்கனியிலிருந்து போதிய நெடியில் மூக்குத் தண்டு எனையறியாமலே சுணுங்கிற்று. "மோப்ப மாஸ்டர்” என்று ஏற்கனவே பட்டம் வாங்கி யிருக்கிறேன். வேட்டை நாய் என்று அழைக்கவில்லை. மரியாதைக் குறைவு ஆயிற்றே !

ராஜு பால்கனியிலிருந்து வெளிப்பட்டான். அவன் முகம் லேசாய் வெளிறிட்டிருந்தது. இரு வ ரு ம் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றோம்.

மனிதனோ, மிருகமோ, எவ்வளவு நெருங்கிய உறவா னாலும் சரி எப்பவும் நம்மில் ஒரு நம்பிக்கையற்றதன்மை, ஒரு சதா விழிப்பு இயங்கிக்கொண்டேயிருக்கிறது. இந்த உஷார், ஜீவனின் இயல்புக்கே உரிய தற்காப்போ !

ராஜூவுக்குப் படிக்க உடல் வணங்கவில்லை. நான் வேண்டாம்னா சொல்றேன் ?' அவன் தாய் என்னிடம் கை வரிக்கிறாள்.'அவன் தான் வேலைக்குப் போகணும்னு ஆசைப்படறான். நீதான அப்பாவிடம் சொல்லேன்’னு என னைப் பிடுங்கியெடுக்கிறான். அவன் இஷ்டப்படி ஒரு வேளையைத்தான். பண்ணி வெச்சுடுங்களேன் 1 வயசுப்