பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 17 பிளவைச் செப்பனிட நான் முற்படவில்லை. பயன்? நாம் தான் நாளுக்கு நாள் சுட்டமண் ஆகிக் கொண்டிருக் கிறோமே !

'உங்கப்பா என்னடா காலத்தோடு ஒட்டின மனுஷ்னேயில்லை உத்தியோகம் பண்றார்னுபேர், இன்னும் கைக் கடிகாரம்கூட இல்லை. காய்கறிக் கடைக்காரன் கூட கடிகாரம் கட்டிண்டுதான் சொத்தைக் கத்தரிக்காயை நிறுத்துப் போடறான். அதையும் உங்கப்பா வாய் பேசாமல் வாங்கிண்டு வந்துதான் இங்கு கொட்டறார். மாமனார் வீட்டில் வாங்கிப் போட்டால்தான் உண்டா ? தானா வாங்கிப் போட்டுக்கொள்ள வக்கில்லையா ? நாளாகவில்லையா? உங்கப்பாவின் மாப்பிள்ளையழைப் பின்போதே, இவர் வேட்டியைத் தட்டிச் சுத்திக் கட்டிண்டு காரிலிருந்து இறங்கிைைதநான் மாடியிலிருந்து பார்த்தது. நான் நாலு பெத்தாச்சு. நாளுக்கும் மறக்காது. இன்னும் அந்தக்கோலம் நெஞ்சை அறுத்துண்டு தானிருக்கு. ஒரு சினிமா டிராமா ஆம்படையாளைத் தனியா அன்ழச்சுண்டு போனதுண்டா? கேட்டால், "நீ வேணும்னா போயேன்!” நான் வேனது போறேன். இல்லை இவர் போகலியேன்னு நான் போகாமலிருக்க முடியுமா? நான் போறேன், என் பிள்ளைகளை அன்ழச்சுண்டு போறேன்; நீங்கள் தடுக்கலே என்பதா கணக்கு ! உங்களோடு என்று எனக்கு என் பங்கு எங்கே?”

ராதையின் குரல்களே இப்படித்தான்.

"ஆள் கால், ஆடை முக்கால்னு உங்க அப்பா இன்னும் காலத்தோடு ஒட்டினால் நம் குடும்பம் இன்னும் முன்னேறலாம். என் த்ங்கை போல், நம் வீட்டிலும் ஒரு சமையற்காரனும் வாசலில் ஒரு காரும் நிற்கக்கூடாதா ? இல்லை இரண்டுக்கும்தான் எனக்குத் தகுதியில்லையா?"

எனக்குத் தெரிந்து ராதைக்கு மூன்று ஆசைகள்.

அவளைக் காலையில் எழுப்பக் கூடாது.

அவள் செலவுக்குப் பணம் அவ்வப்போது முளைத்துக் கொண்டே இருக்கவேண்டும் அவளைக் கணக்குக் கேட்கக் (එංt-ofr ථූ) •

த்வனி-2,