பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 25. 0f my god இந்தத் தும்பைத் தலையும் நரை புருவமும் படுத்தும்பாடு !

'அதே மாதிரி உங்களுக்கும் என்னால்-எங்களால் gr&rrô & <£J&gy)|io6S fr don't hesitate—”

'உன்னால்-உங்களால் எனக்கு ஆகவேண்டியது. நீங்கள் என்னைச் சும்மா விட்டு விடுவதுதான். நான் வேண்டுவது தனிமை” என்று இவனிடம் சொல்ல முடியுமோ ? . - - "ஓ அதற்கென்ன ?' என்று சொல்லி எழுகின்றேன், அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு என்னுள் வீற்றிருக்கும் சிரிப்பு என்னைப் பார்த்துச் சிரிக்கின்றது.

நான் தனிமை, தனிமை என்கிறேன். ஆனால் உண்மையில், உண்மையான தனிமையைச் சாதிக்க முடியுமோ ? -

தனியாயிருந்தால் மட்டும் தனிமை கிட்டி விடுமோ ? . அதுவே முதலில் இருக்கிறதோ ?

ஏனெனில், நான் எங்கு போன்ாலும், யாரை விட்டுத் தப்பி வந்தாலும் எப்பவும் என்னோடு இருக்கிறேனே !

எனக்கும் நான் நாஸ்திதான் தனிமை. - துறந்துவிட்டதால் மட்டும் தனிமை வருமோ ? ஒன் றைத் துறந்தால் மற்றொன்று அதனினும் பெரிது இட்டு நிரப்ப வந்து விடுகின்றது.

சகலமும் துறந்தவனுக்கு உலகமே உடைமை. ஆகையால் சின்ன உடைமை, பெரிய உடைமை எனும் தாரதம்மியங்கள் தவிர உண்மையான தனிமையுமில்லை.

உண்மையான துறவுமில்லை. இன்றிரவு எனக்கு ஒரு வேடிக்கையான எண்ணம் தோன்றிற்று. முற்றிலும் வேடிக்கையுமல்ல. விஷமமானது தான். நான் தனியாக வந்து எம்மட்டும் தனிமையைச் சாதித்திருக்கிறேன் என அறிய ஆவல் கொண்டேன். இன்று என் இரவுச் சாப்பாட்டை இரந்துண்டால் என்ன?