பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 3?

சேகருக்கு என் நினைப்பு அதிகம் இருப்பதாய்த் தெரி யல்லே. அவன் இப்போது ரயில் சந்தோஷ்த்திலிருந்தான். அவள் ஒன்றும் பேசவில்லை. என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதைக் காட்டிலும் வெளுப்பாய் விளக்கு வெளிச்சத்தில் காட்டிய அவள் நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு, பேசத்தவிக்கும் வாய் போன்று தன் உயிர் கொண்டு திகழ்ந்தது.

வண்டி நகர்ந்தது. கூட நான் நடந்தேன். திடீரென அவ்விழிகளினின்று கண்ணிர் புரண்டது. அதன் உதிர்களைத் துடைக்கக் கூட முற்படவில்லை. அவளிடம் செயல் இல்லை.

'இவ்வளவு இளகின மனதாயிருந்தால் உலகில் எப்படி வளைய வரது?’ அவளைத் தேற்றும் முறையில் கேலி பண்ணினேன். பார்க்கப் போனால் நம் பழக்கம் இந்த மூனு மாஸ்மாத்தானே! இத்தனைக் கண்ணிரும் எனக்கா ”?

'இல்லை. உங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் அம்மா நினைப்பு வரது அவளுக்காகவும் கூட என்று வெச்சிக்கோங்களேன்.'

'ஏன், உன் தாயார் என் முகஜாடையாயிருப் και , τώπ πτ?"

"கொஞ்சம் கூட இல்லை.”

பின்னே ?” 'அதுதான் எனக்குப் புரியவில்லை. ஆனால் உங்களைப் பார்த்தால் அம்மா நினைப்பு வரது.” -

வண்டி வேகம் எடுத்து விட்டது. "உன் அம்மா யார் மாதிரி இருப்பாள் ?” "என் தாய் என் ஜாடை தான்.” எங்கோ டெலிபோன் மணி அடித்தது. ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருக்கலாம். -

'உன் அம்மா பேர் என்ன?” அவள் திடீரென புன்னகை புரிந்ததால், நனைந்த கன்னங்களின் மேல் அதன் ஒளி படருகையில் அவளிடம் ஏதோ அமானுஷ்யம் மிளிர்ந்தது.