பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 லா. ச. ராமாமிருதம்

The customer is aiways right. இதுதான் பாங்க் மானேஜர் உத்தியோகம். அவசரமாய் எழுந்து பெட்டியை எடுத்துக் கையில்

தகைப்பெட்டியுடன் என் கரங்களைப் பற்றிக் கொண்ட அவன் கைகள்மேல் அவன் முகம் குனிந்து. உடல் குலுங்கி, தோள்கள் குலுங்கி (நெருப்புக்குச்சி போன்று மெலிந்து ஒடிந்து விடுமோ போன்ற தோள்கள்) என் புறங்கைமேல் இரண்டு அனல் சொட்டுக்கள் உதிர்ந்து பொரிந்தன.

'என்ன தேவரே? நான் பதறிப் போனேன், எனக்கு முழங்கால்கள் கிடுகிடுத்து விட்டன.

தேவர் நகைப்பெட்டியை மேஜைமேல் வைத்தார். மூக்கை இரு முறை உறிஞ்சிக் கொண்டார்.

'ஒண்ணுமில்லேங்க. இந்த நகையெல்லாம் என் மூத்த மகளுக்கு உள்ளதுங்க. நல்ல இடத்திலே கட்டிக் கொடுத்தேனுங்க. நல்லாத்தான் வாழ்ந்தாள். மருமவப் பிள்ளைக்குப் பெரிய உத்தியோகம். டி.புடி ரெஜிஸ்தவ ராருங்க. ஒரே பிள்ளை. நஞ்சை, புஞ்சை, காடு, கிணறு, வீடு, மனை, தோப்பு எல்லாமே உண்டுங்க. போன. வருடம் ஆறு மாதம் வயித்து வலியிலே துடிச்சா பாருங்க. பார்க்க வேணாங்க யானைக்குட்டியாட்டம் இருப்பா அந்த ஆறுமாதத்துலே வெற்றிலைக்கு நடு நரம்பாட்டம் ஆயிட்டா. கடைசி மூணு மாதம் வேலூர் ஆஸ்பத்திரியில்ே வெச்சுப் பார்த்தோமுங்க. அந்த மூணு மாதத்திலே இருவது பெரிய நோட்டு அவுட்டு. அப்பா எப்படியாச்சேனும் என் மூணு குழந்தேங்களுக்குத் தாயாரா என்னைக் காப்பாத்திக் கொடுத்துடு. தலைமுறைக்குத் தலைமுறை உன் பேரை வெச்சு உன் பேரைச் சொல்லிக் கிட்டிருப்போம்’னு அழுவறா. அசட்டுப் பொண்ணு! எனக்குச் சொல்லனுமா? யாருக்குச் செய்யப் போறேன்? ஆனால் அவள் வேதனை அப்படி அவளைச் சொல்ல