பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密纷 லா. ச. ராமாமிருதம்

ஒட்டிய கரை (அல்லது கரையோடு ஒட்டிய சரிகையா ?) போல் தம்பூரா சுருதியுடன் லயித்துக்கொண்டு தான் எழுப்பும் நாத வெள்ளத்தில் தானே திளைத்துக்கொண்டு பாடுபவன், கேட்பவர் எல்லோரையும் தன்னில் மூழ்கிக் கொண்டு பந்தலில் தானே நிரம்பி, தன்னிச்சையாய், உள்ளம் நெகிழும் குழைவுகளிலும், மதி மயங்கும் பிர்க்காக்களிலும், பாம்பைப்போல் வ ைள ந் து ம் விரைந்தும் கற்பனையில் திரிந்து சஞ்சரிக்கையில்: இவரைப்போல் எனக்கும் பாடவராதா? என்று எழுந்த அசூயையோ ஆசையோ ஒரு பக்கமிருக்கட்டும், அதனினும் உருவற்றதாய், இவர் எழுப்பும் இந் நாத ஜாலத்துள் நான் கலந்துவிட முடியாதா? என் இதயத்தைத் தொண்டைவரை எழுப்புகிறதே, இந்தக் கமகங்களுடன் ஒன்றாய் நான் தேய்ந்துவிட முடியாதா? வங்கி வளையல் போன்ற இந்தப் பிர்க்காவின் பல இன்னொலிச் சிதர் களுள் ஒன்றாய் நான் பதுங்கிவிட முடியாதா?......”

இன்னொரு சமயம் அவன் வாய்க்காவின் கரையோர மாய்ப் போய்க்கொண்டிருக்கையில் மீன்கொத்திப் பறவை யொன்று மீன் பிடிப்பதைக் கண்டான். அதன் நீல நிறம் வெய்யிலில் பட்டுப்போல் பளபளக்க, ஜல மட்டத்துக்கு நேர்ச் செங்குத்தாய், இறக்கைகள் அடித்துக் கொள்ளும் வேகம் ஒரோர் சமயம் பார்வையையும் ஏமாற்ற, வானில் ஒரே நிலையில் மிதந்து கொண்டு, திடீரென்று ஜலத்தின் மேல் கல்லைப்போல் நேர்க்கணக்கில் விழுந்து அலகில் கொத்திய மீனுடன் ஆகாயத்தில் மறுபடியும் எழும் வேகத்தைப் பார்த்ததும், அது விழுந்து எழும் வேகத்தின் அழகில் நான் ஒடுங்க மாட்டேனோ?......

இம்மாதிரியாய் அநிச்சயமாய், உருக்களற்று, மனத் திரையில் எழும் எண்ணங்களினூடே இன்னொரு நினைவு......

'ஓரிரவு வாசற் குறட்டில் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்குகையில் நடுநிசியில் விழித்துக்கொண்டு... எங்கும் நிசப்தம். முழுநிலா வானில் பதிர்ப்பேணிபோல் பிசுபிசு