பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

குறிப்பாக மக்களிடை பலவாறாய் இன்று குவிந்திருக்கும் தங்கத்தில் ஒருநூறுகோடி பெறுமான ரூபாய்க்குப் பொன்திரட்டித் தருதல் பெருவணிகர்தொழிலபதிபர் செயத்தகுமோர் பணியாம்! பொறுப்பாக எல்லாரும் அரசோடு சேர்ந்து புனிதமிகு இம்முனைப்பில் மெய்யாக உழைத்தால் முறையான பொருளியலில் புதுமலர்ச்சி தோண்றும்! மோதவரும் இனினவெல்லாம் தகர்த்துவிடல் கூடும்!

ஆயிரத்துத் தொளாயிரத்தென்பத்தோராம் ஆண்டில் ஆக்கநலப் பொருள்வளத்தைப் பாரதந்தான் எட்டி மேயதுறை அனைத்திலுமே நிறைவெய்திக் கொழிக்கும் விருப்பமுறின் அந்நேரம் இத்தங்கம் யாவும் தூயபெரும் நண்றியுடன் மக்களிடமே அரசு துளிதயக்கம் காட்டாமல் அப்படியே கொடுக்கும்! தாயகமே குரல்கொடுத்தாற்போல் அசோக் மேத்தா தருணத்தில் விடுத்ததொரு வேண்டுகோளாம் இதுவே!