இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39
நடந்து கொண்டே இரு!
மேலா - கிழா ?
பத்திரிகை ஒன்றில் ரத்தினச் சிற்பமாய்ப் புகைப்படம் ஒன்று! புகழில் புரளும் நட்சத் திரப்படம்! பேட்டி நாடகம்! அதற்காகத் தந்த ஆபாச நிலைகள்! எப்படி? ஆடை இடுப்பில் இல்லை! தொப்புளின் தரிசனம்! மோகப் புன்னகை! வழிய, வழிய வாலிப லீலைகள்! இருவிழிக் கிடையில் இமைகளின் ஒரம் காமக் குறும்பினர் காந்த வெளிச்சம்! கைகளால் நடிகை சுழற்றும் கச்சை!
பாதிமார் பகப் பகுதியைப் பிதுக்கிக் காட்டும் வகையில் காமிராப் பதிவு! ஐயோ! அதுவே படத்தினர் கவர்ச்சி மைய மாக மின்னும் வர்ணம்! 'மஜ்னு - ரோமியோ மைனர்கள் அல்ல, பொக்கைக் கிழடு பொடி டப்பாக்கள் கைத்தடி ஊன்றும் வகையறாக்கள் கூடக் க்ட விநாடியே போதை கொள்ளும் அயோக்கிய, அக்ரம, ஆபாச வித்தை!