பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

நடந்து காெண்டே இரு!




இவ்வைந்தே பாரதத்தின் பஞ்சசீலம்!
இதயமணி நேருபிரான் கண்ட ஞாலம்!
ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பின்னி
'ஓருலகக் கன’வதற்குக் கருவாய் ஊன்றிக்
கவ்வுகின்ற வறுமை; பிணி; வர்க்க பேதம்,
கனலுகின்ற போர்வெறிகள் எதுவு மற்றுச்
செவ்வையுற மக்கள்குலம் அனபில் தோய
தெய்வ வரம் ஒத்ததான ஞான சீலம்!


எத்தனையோ இனக்கூட்டம்; மொழிகள் கூட்டம்;
எத்தனையோ தத்துவங்கள்; கலாச்சா ரங்கள்;
எத்தனையோ அரசியலின் சிந்தாந் தங்கள்!
எல்லாமே சங்கமித்துச் சம்மே வளித்தே
மொத்தமதாய் ஒருசேரக் கலந்து றைந்தே
முழுவலிவு வசீகரங்கள் பெற்றுப் பெற்றே
புத்தம்புது பொன்வையம் மலர்வதற்கே
புனிதமகான் நேருபிரான் வழியே வழியாம்!

(1964)